News October 10, 2025
சென்னையில் மெட்ரோ வாட்டர் குறை தீர்க்கும் கூட்டம்

சென்னை மெட்ரோவாட்டர் நிறுவனம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, நகரம் முழுவதும் உள்ள அதன் அனைத்து பகுதி அலுவலகங்களிலும் குறை தீர்க்கும் கூட்டங்களை நடத்துகிறது. மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் இக்கூட்டங்கல் நடைபெறும். நீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல், புதிய இணைப்புகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து மக்கள் புகார்களை தெரிவிக்கலாம். உடனே தீர்வு காணப்படும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 10, 2025
துணை நடிகையின் தாயை தாக்கிய நபர் கைது

சென்னையை அடுத்த ஆலப்பாக்த்தில் துணை நடிகை மீனாட்சி கோவிந்தராஜன், மற்றும் அவரது தாயாரையும் செருப்பால் அடித்த நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தகராறை தொடர்ந்து, தற்போது பழிவாங்கும் நோக்கில் செருப்பால் அடித்ததாக கைதான நபர் போலீசாரிடம் வாக்குமூலம் தந்துள்ளார்.
News October 10, 2025
சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை

சென்னை கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலைய வளாகங்கள், நடைமேடைகள், பயணச்சீட்டு வழங்கும் இடங்கள், சுவர்கள், ரயில் பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அங்கீகாரமற்ற சுவரொட்டிகள், பதாகைகள், ஸ்டிக்கர்கள், விளம்பரங்கள் ஒட்டப்பட்டு வருவது கவனிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களுக்கு எதிராக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News October 10, 2025
நாளை கிராம சபை கூட்டம்: ககன்தீப் சிங் பேடி பேட்டி

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர், “தமிழ்நாடு முழுவதும் நாளை (அக்.11) கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. இதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். பைபர் நெட் இணைப்பை பயன்படுத்தி முதல்வர் பேசுவது, மாநிலம் முழுவதும் 10,000 கிராம பஞ்சாயத்துகளில் நேரலையாக ஒளிபரப்பாகும்” என கூறினார்