News April 15, 2024
தேர்தலுக்கு தடை கோரி மனு

நெல்லை தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்தொகுதியின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சொத்து விவரங்களை மறைத்திருப்பதாக தேர்தல் ஆணையத்தில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்மீது தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் வரை தேர்தலை நிறுத்த வேண்டும் என்று வழக்கறிஞர் மகாராஜன் மனுதாக்கல் செய்திருக்கிறார்.
Similar News
News July 7, 2025
கேப்டன்ஷிப் ரெக்கார்ட்… சாதனை படைத்த கில்!

ENG-க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம், கேப்டன் கில் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். வெளிநாட்டில் இளம் வயதில் டெஸ்ட் போட்டியை வென்ற வீரர் என்ற பெருமையை கில்(25 ஆண்டுகள் 297 நாட்கள்) பெற்றார். இதற்கு முன்னர் கவாஸ்கர் (26 ஆண்டுகள் 198 நாட்கள்) இச்சாதனையை செய்திருந்தார். இந்த டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் தான் இந்தியாவின் பிரின்ஸ் என நிரூபித்து வருகிறார் கேப்டன் கில்.
News July 7, 2025
திருச்செந்தூரானை எப்போது தரிசித்தாலும் புண்ணியம்

‘சொல்ல சொல்ல இனிக்குதடா’ என்பதைப் போல முருகனை நினைக்க நினைக்க வாழ்வில் நன்மை பயக்கும். அப்படிப்பட்ட திருச்செந்தூர் முருகப் பெருமானின் மனம் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெற்ற குடமுழுக்கால் குளிர்விக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று முதல் ஆக.5 வரை மண்டல பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நாள்களில் பக்தர்கள் எப்போது தரிசனம் செய்தாலும் குடமுழுக்கில் கலந்து கொள்கின்ற புண்ணியம் கிடைக்கும். அரோகரா!
News July 7, 2025
உலக போர் வரலாம்… மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

உக்ரைன் & மத்திய கிழக்கில் நடந்து வரும் போர்களை சுட்டிக்காட்டி, எப்போது வேண்டுமானாலும் உலக போர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், வல்லரசுகளின் சர்வாதிகார போக்கால், நாடுகளிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் அன்பு குறைந்து வருவதாகவும் வருத்தம் தெரிவித்தார்.