News October 10, 2025
பிஹார் தேர்தலில் PK எடுத்த புது ரூட்டு!

பிஹாரில் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் EX IPS அதிகாரிகள், டாக்டர்கள், வழக்கறிஞர், கணிதவியல் நிபுணர் என நன்கு பரிச்சயமான படித்த நபர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பிரசாந்த் கிஷோர், கட்சி தொடங்கி முதல்முறையாக தேர்தல் களம் காண உள்ள நிலையில், பாரம்பரிய கட்சிகளை காட்டிலும் வேறுபட்ட முறையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.
Similar News
News October 10, 2025
தீபாவளி போனஸுக்கும் வரி உண்டு

தீபாவளியில் புத்தாடை, பட்டாசு தவறாமல் இடம்பெறுவது போல், போனஸ், பரிசுகளுக்கும் ஊழியர்களின் மனதில் நிச்சயம் இடம் உண்டு. அப்படி ஊழியர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி பரிசோ (அ) போனஸ் தொகையோ ₹5,000-க்கு மேல் இருந்தால் நிச்சயம் வரி செலுத்த வேண்டும். அத்துடன், இதனை ITR-லும் காண்பிக்க வேண்டும். தீபாவளி பரிசில் ஸ்வீட் பாக்ஸ், பட்டாசு பேக்கேஜ், புத்தாடை, நகை, வாட்ச், ரொக்கம் ஆகியவையும் அடங்கும்.
News October 10, 2025
டாப் 10 வாட்ச் பிராண்டுகள்

விலை உயர்ந்த வாட்ச்சுகள், கலைநயம் கொண்ட தனித்துவமான வடிவமைப்பின் மூலம் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. நீங்களும் விலை உயர்ந்த வாட்ச்சுகளை தேடுகிறீர்களா? டாப் 10 இடங்களில் உள்ள விலை உயர்ந்த வாட்ச் பிராண்டுகள் மற்றும் அதன் சந்தை மதிப்பை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. எந்த வாட்ச் பிராண்டு டாப்பில் இருக்கு தெரியுமா? கீழே கமெண்ட்ல சொல்லுங்க.
News October 10, 2025
பிரபல நடிகர் மரணம்.. பரபரப்பு தகவல்

நடிகரும், பாடி பில்டருமான <<17961776>>வரீந்தர் குமான்<<>> ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழந்தார். இதற்கு, அவர் பின்பற்றிய Vegan Diet தான் காரணம் என சிலர் கூறிவருகின்றனர். ஆனால், Vegan Diet பின்பற்றுவதால் இதயம் சார்ந்த பிரச்னைகள் வருவது குறைவு என டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும், எந்த diet-ஆக இருந்தாலும், சரியான அளவு புரதம், நார்ச்சத்து, மாவு சத்து இருப்பது அவசியம் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். SHARE.