News April 15, 2024
போருக்கு இடையே பாகிஸ்தான் செல்லும் ஈரான் அதிபர்

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி வரும் 22ஆம் தேதி பாகிஸ்தான் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பாகிஸ்தான் ஆட்சியாளர்களை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. இரு நாடுகளும் முக்கிய பொருளாதார நலன்களைப் பகிர்ந்துகொள்வதால் ஈரானிய அதிபரின் பாகிஸ்தான் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Similar News
News November 14, 2025
ECI மீதான நம்பிக்கை மக்களுக்கு அதிகரித்துள்ளது: PM

பிஹாரில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகமாக இருந்த போது மக்கள் வாக்களிக்கவே அச்சப்பட்டதாக மோடி தெரிவித்துள்ளார். RJD-யின் காட்டாச்சியில் வாக்குச்சாவடியில் வெளிப்படையாக வன்முறை நடக்கும் என்றும், வாக்கு பெட்டிகள் திருடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்று மக்கள் அச்சமின்றி வாக்களித்துள்ளதாகவும், ECI-ன் மீது மக்கள் முன்பைவிட நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 14, 2025
பிஹார் தேர்தல்: MY-ஐ வீழ்த்திய WE

பிஹார் தேர்தலில் முஸ்லிம்(M), யாதவ்(Y) சமூகங்கள் அடங்கிய MY வாக்காளர்களை மட்டுமே ஆர்ஜேடி-காங்., குறிவைத்த நிலையில், பெண்கள் (W), மிகப்பிற்படுத்தப்பட்டோர் (EBC) பிரிவினர் அடங்கிய WE வாக்காளர்களை குறிவைத்து NDA வெற்றியை வசப்படுத்தியுள்ளது. பெண்களுக்கான ₹10,000 டெபாசிட் உள்ளிட்ட திட்டங்கள், EBC பிரிவினருக்கான பல்வேறு சிறப்பு சமூகநலத் திட்டங்கள், தலித்கள் ஆதரவு ஆகியவை WE ஆதரவை NDA-வுக்கு திருப்பியது.
News November 14, 2025
இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா? ஸ்வைப் பண்ணுங்க

உலகில் உள்ள பல வித்தியாசமான விஷயங்கள் பெரும்பாலும், அனைவருக்கும் தெரிவதில்லை. சிலர் அதை ஆர்வத்துடன் தேடி தெரிந்துகொள்கின்றனர். நீங்கள், இதுபோன்ற தகவல்கள் தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? மேலே உள்ள போட்டோக்களில், சில தகவல்களை பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை SHARE பண்ணுங்க.


