News October 10, 2025
நெல்லை: ரூ.10 அதிகம் வாங்கிய நடத்துனருக்கு ரூ.17,000 அபராதம்

தென்திருப்பேரையைச் சேர்ந்தவர் இசக்கி செல்வம்(51). இவர் நெல்லையிலிருந்து மதுரைக்கு அரசு பஸ் சென்ற போது மாற்றுத்திறனாளி டிக்கெட் ரூ.40க்கு பதில் ரூ.50யாக நடத்துனர் வாங்கியதுடன் பஸ் நிலையம் வெளியே இறக்கி விட்டார். இது குறித்து வழக்கறிஞர் பிரம்மா மூலம் தொடர்ந்து வழக்கை நெல்லை நுகர்வோர் ஆணையம் நேற்று விசாரித்து இசக்கி செல்வதற்கு ரூ.17,010 அரசு போக்குவரத்து கழகம் வழங்க உத்தரவிட்டது.
Similar News
News October 10, 2025
வாங்க கற்றுக் கொள்வோம்: பொதுமக்களுக்கு அழைப்பு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் வைத்து நாளை (அக்.11) காலை 10 மணிக்கு வாங்க கற்றுக் கொள்வோம் என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு வகுப்பு நடைபெற உள்ளது. இதில் தீயணைப்புத் துறையின் பணிகள் குறித்த விபரங்கள் வழங்கப்பட உள்ளது. எனவே இதில் பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் கலந்து கொள்ள தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் கேட்டுக் கொண்டுள்ளார்.
News October 10, 2025
நெல்லை: குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு!

நெல்லை மக்களே, அக்.1 முதல் மத்திய அரசு 5 – 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் இல்லை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இதை UPDATE செய்தால் தான் பள்ளிகளில் சேர்க்கை, ஸ்காலர்ஷிப், அரசு உதவிகள் பெற முடியும் என அறிவுறுத்தியுள்ளது. ஆதார் மையங்களில் இலவசமா UPDATE பண்ணுங்க. இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க
News October 10, 2025
நெல்லை மாவட்ட மின்வாரியம் அறிவுறுத்தல்

நெல்லை மாவட்டத்தில் மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் மின்வாரியம் சார்பில் மழைக்கால மின் விபத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். இன்று (அக்டோபர் 10) விடுத்துள்ள செய்தி குறிப்பில் மின் மாற்றிகள் மற்றும் மின் இணைப்பு பெட்டிகள் அமைந்துள்ள இடங்களில் மழை நீர் தேங்கி இருந்தால் அந்த நீரில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.