News October 10, 2025

பரமக்குடியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி

image

பரமக்குடி வட்டம், பாம்பூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் (42) இராமநாதபுரம் – மதுரை நெடுஞ்சாலையில் ஆடு மேய்த்து கொண்டு இருந்த போது மின்னல் தாக்கி (அக்.08) உயிரிழந்தார். இந்நிலையில் தமிழக அரசு மேய்ச்சல்காரர்களுக்கு சிறப்பு காப்பீட்டு திட்டங்களையும் அதிகபட்ச இழப்பீட்டு தொகையையும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

Similar News

News October 11, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து காவல்துறை

image

இன்று (அக்டோபர்.10) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News October 10, 2025

ராம்நாடு: ஆன்லைன் மோசடி ரூ.51,000 மீட்பு

image

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தேவி என்பவர் இணையத்தின் மூலம் ரூ.51,000 பணத்தை இழந்ததாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் துறையினர் விரைவான விசாரணை மேற்கொண்டு, இழந்த ரூ.51,000 பணத்தையும் மீட்டனர். மீட்கப்பட்ட பணத்தை இன்று (அக்.10) இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் உரிய நபரிடம் வழங்கினார்கள்.

News October 10, 2025

ராம்நாடு: அ­ர­சு ஐ.டி.ஐயில் பயிற்­சி மு­காம் அறிவிப்பு

image

ப­ரமக்­குடி அரசு ஐ.டி.ஐயில் பிரதம மந்­திரி­ தே­சிய­ தொ­ழிற்­ பழகுநர் பயிற்­சிக்­குரிய­ தேர்வு முகாம் (அக்.13) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 5க்கும் மேற்­பட்­ட அரசு நிறு­வ­னங்­கள், 50க்கும் மேற்­பட்­ட தனியார் நிறு­வ­னங்கள் நேரடியா­க­ ப­யிற்சியா­ளர்களை தேர்வு செய்ய உள்­ள­தால், க­லந்­து
கொண்டு­ ப­யன்­பெ­றுமா­று கலெக்டர் சிம்­ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!