News October 10, 2025
தந்தை தொகுதியில் போட்டியிடும் வாரிசு?

தந்தை விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றிபெற்ற விருத்தாசலம் (அ) ரிஷிவந்தியம் தொகுதியில் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட மும்முரம் காட்டுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இதற்காகவே அவர் தரப்பில் மினி சர்வே நடத்தப்பட்டிருக்கிறதாம். இதில், விஜயகாந்துக்கு இப்போதும் தொகுதியில் செல்வாக்கு இருப்பதால், தனக்கும் அதில் பாதியாவது கிடைக்கும் என ரிசல்ட் வந்திருக்கிறதாம். தந்தை அளவுக்கு மகனால் சோபிக்க முடியுமா?
Similar News
News October 10, 2025
அதிகம் விற்பனையான 10 கார்கள்

வரி குறைப்பு மற்றும் நவராத்திரி பண்டிகை என செப்டம்பரில் கார் விற்பனை களைகட்டியது. எந்தெந்த கார்கள், எவ்வளவு விற்பனையாகின என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், டாப் 10-யில் இடம்பிடித்துள்ள கார்கள் மற்றும் அதன் விற்பனை விவரத்தை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க. உங்களுக்கு பிடித்த கார் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 10, 2025
அடங்காத அழுகுரல்.. 30 பேரை கொன்ற இஸ்ரேல்

டிரம்ப்பின் காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலும், ஹமாஸும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த பின்னர், இதுவரை 30 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளதாக பாலஸ்தீன் தெரிவித்துள்ளது. ஆனால், ஹமாஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டதால், தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது வெறும் கண்துடைப்பு நாடகம் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News October 10, 2025
20 வயது காதலியை கர்ப்பமாக்கிய 80 வயது தாத்தா

காதலுக்கு கண்ணுமில்லை, வயதுமில்லை என்ற கேப்ஷனுடன் SM-ல் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. 80 வயது முதியவர் ஃபிராங்குக்குள் ஆழமான காதலை கண்டுகொண்ட 20 வயது ஜெசிகா, தானும் அவரை காதலிக்க தொடங்கினார். ஊரார் பேச்சை உதாசீனப்படுத்தி காதலில் திளைத்த இந்த ஜோடிக்கு, இப்போது குழந்தை பிறக்கப் போகிறதாம். குழந்தையுடன் காதலின் அடுத்த அத்தியாயத்தை தொடங்க ஆவலுடன் காத்திருக்கின்றனர் தம்பதியர். வாழ்த்தலாமே!