News October 10, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேருக்கு நீதிமன்ற காவல்

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை மன்னார் நீதிமன்றத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ரபீக் மீனவர்களை வரும் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அடுத்து 30 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News October 11, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து காவல்துறை

இன்று (அக்டோபர்.10) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News October 10, 2025
ராம்நாடு: ஆன்லைன் மோசடி ரூ.51,000 மீட்பு

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தேவி என்பவர் இணையத்தின் மூலம் ரூ.51,000 பணத்தை இழந்ததாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் துறையினர் விரைவான விசாரணை மேற்கொண்டு, இழந்த ரூ.51,000 பணத்தையும் மீட்டனர். மீட்கப்பட்ட பணத்தை இன்று (அக்.10) இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் உரிய நபரிடம் வழங்கினார்கள்.
News October 10, 2025
ராம்நாடு: அரசு ஐ.டி.ஐயில் பயிற்சி முகாம் அறிவிப்பு

பரமக்குடி அரசு ஐ.டி.ஐயில் பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் பயிற்சிக்குரிய தேர்வு முகாம் (அக்.13) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 5க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள், 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் நேரடியாக பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளதால், கலந்து
கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.