News October 10, 2025

அவினாசி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

image

அவிநாசி அருகே தெக்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் வைரவேல். இவரது மனைவி அவ்வையார். அவ்வையாருக்கு அடிக்கடி கெட்ட கனவு வந்ததாக அருகில் உள்ளவர்களிடம் கூறி வந்துள்ளார். தொடர்ந்து நேற்று முந்தினம் அதிகாலை வீட்டிலிருந்து வெளியேறி அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கி அருகில் யாரும் இல்லாத இடத்தில் வைத்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவிநாசி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 5, 2025

திருப்பூர்: ரேஷன் கடையில் கைரேகை வேலை செய்யலையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக் <<>>செய்து Grievance Redressal, திருப்பூர் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழைக்கலாம். (SHARE IT)

News November 5, 2025

திருப்பூர்: மக்களுக்கு முக்கிய எண்கள்

image

காவல்துறை சார்பில் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அவசர உதவிக்கு-100, ஆம்புலன்ஸ் சேவைக்கான-108, தீயணைப்பு துறைக்கான-101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இது தவிர இருக்க வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன. பெண்களுக்கான அவசர உதவி – 1091, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு-1098, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு-181, பெண்கள், குழந்தைகள் காணாமல் போனால்-1094. ( SHARE)

News November 5, 2025

திருப்பூர்: வறுமை நீங்கி, செல்வம் சேர! இங்கு போங்க

image

திருப்பூர் மக்களே, ஐப்பசி பெளர்ணமி என்பது சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் மிகவும் புனிதமான நாளாகும். இந்நாளில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று இன்று வனங்கினால் சிறப்பு உண்டாகும். மேலும், கோயிலில் அன்னாபிஷேக தரிசனத்தை கண்டால் கடன் தீரும், வறுமை நீங்கும், செல்வ வளம் சேரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!