News April 15, 2024
பெரம்பலூர் : வனத்துறையினர் எச்சரிக்கை

பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் இரண்டு சிறுத்தைகள் புகுந்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவுடன் பொய்யான செய்தி உலா வந்து கொண்டிருக்கின்றது.
இது தவறான தகவலாகும். இது போன்று பொதுமக்களை பீதிக்குள்ளாக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என
பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் இரா.குகனேஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 28, 2025
பெரம்பலூர்: இளைஞர்களுக்கு இலவச அழகுக்கலை பயிற்சி!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்கள் அழகுக்கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி பெற 8ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்தவராக இருக்க வேண்டும். பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ்களுடன் தனியார் அழகு நிலையங்களில் பணிப்புரிய வேலை வாய்ப்பு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகவும். ஷேர் பண்ணுங்க!
News August 27, 2025
பெரம்பலூர்: அரசு வேலை..தேர்வு இல்லை!

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் வருகிற செப்.25-ம் தேதிக்குள் இந்த <
News August 27, 2025
பெரம்பலூர்: 256 இடங்களில் சிலை வைக்க அனுமதி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் 256 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீஸ் அனுமதி அளித்துள்ளனர். பெரம்பலூர் 56, ஊரகப்பகுதி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 52ம், பாடலூர் காவல் நிலையத்தில் 28ம், மருவத்தூர் 13, அரும்பாவூர் 35, குன்னம் பகுதியில் 25, மங்கல மேடு 34, வி.களத்தூர் 16 என மொத்தம் 256 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளனர்.