News October 10, 2025

சென்னை: புதிய ரேஷன் கார்டு வேண்டுமா?

image

சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் அக்.2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிப்பு, ரேஷன் அட்டையில் போன் எண் இணைப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

Similar News

News October 10, 2025

நாளை கிராம சபை கூட்டம்: ககன்தீப் சிங் பேடி பேட்டி

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர், “தமிழ்நாடு முழுவதும் நாளை (அக்.11) கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. இதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். பைபர் நெட் இணைப்பை பயன்படுத்தி முதல்வர் பேசுவது, மாநிலம் முழுவதும் 10,000 கிராம பஞ்சாயத்துகளில் நேரலையாக ஒளிபரப்பாகும்” என கூறினார்

News October 10, 2025

நீர்வளத்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம்

image

சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று (அக்10) நீர்வளத்துறையின் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நீர்வளத்துறை செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவின் தலைவர் சுப்பிரமணியன், நீர்வளத் துறையின் சிறப்புச் செயலாளர் ஸ்ரீதரன் உள்ளார்.

News October 10, 2025

சென்னை: மின் கட்டணத்தை குறைக்க செம்ம ஐடியா!

image

சென்னையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <>ஆன்லைன் மூலம்<<>> விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். TANGEDCO இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர்!

error: Content is protected !!