News October 10, 2025

தென்காசியில் லஞ்சம் பெற்ற விஏஓ – கைது!

image

தூத்துக்குடி மாவட்டம், சண்முகவேலுக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் சங்கரன்கோவில் அருகே பெரியூரில் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள கூட்டுப் பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற வி.ஏ.ஓ. ராஜ்குமார், ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News December 8, 2025

தென்காசி: அரசு மருத்துவமனையில் இவை இலவசம்

image

நெல்லை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தென்காசி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04636-225326 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News December 8, 2025

சங்கரன்கோவிலில் 257 பேர் கைது!

image

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி சார்பில், சங்கரன் கோவில் தேரடி வீதியில் நேற்று ஆர்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி கோவில் வாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, கோ.செயலாளர் ஆறுமுகச்சாமி, மா.செ ஆறுமுகம் உள்ளிட்ட 257 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

News December 8, 2025

தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

தென்காசி மாவட்டத்தில் இன்று (டிச.08) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!