News October 10, 2025
திமுக மீது அதிருப்தியில் இருக்கும் கூட்டணி கட்சி?

வாணியம்பாடியை கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக்கிடம் இருந்து பறிக்க திமுக கணக்கு போடுவதாக கூறப்படுகிறது. திருப்பத்தூரின் வாணியம்பாடியில் முஸ்லிம் வாக்குகள் அதிகம். அதனாலேயே முஸ்லிம் லீக் கட்சிக்கு அது ஒதுக்கப்பட்டு வந்தது. ஆனால், தொடர்ந்து 3 தேர்தல்களில் வாணியம்பாடி தொகுதியில் முஸ்லிம் லீக் தோல்வி அடைந்துள்ளது. எனவே, இம்முறை திமுகவே நேரடியாக களமிறங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 25, 2025
2026-ல் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்!

2026 தொடக்கத்தில் உள்ள கிரஹ நிலைகள், குரு, ராகு கேது பெயர்ச்சிகளின் அடிப்படையில் ராசி பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மேஷம், கடகம், கன்னி, தனுசு, கும்ப ராசியினருக்கு பதவி உயர்வு, பொறுப்புகள் கைகூடி வரும். மிதுன ராசியினர் வெளிநாட்டு வாய்ப்பு வந்தால் தவிர்க்க வேண்டாம். சிம்ம ராசியினர் திட்டமிட்டு செயல்பட்டால் நல்லது நடக்கும். அலட்சியம் தவிர்த்து அக்கறையுடன் செயல்படுவது அனைவருக்கும் அவசியம்.
News December 25, 2025
கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டுமா?

உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா? கவலை வேண்டாம். ரிசர்வ் வங்கி விதிகளின்படி, அழுக்கடைந்த, லேசாக கிழிந்த மற்றும் 2 துண்டுகளாக கிழிந்த நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம். புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும். காந்தி படம், ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம் இல்லாமல் இருந்தால், அந்த நோட்டின் மதிப்பில் ஒரு பகுதி மட்டுமே வழங்கப்படும். இதற்கு எந்த படிவத்தையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை.
News December 25, 2025
பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரத்தை வணங்குகிறேன்: EPS

வீரமங்கை வேலுநாச்சியார் நினைவுநாளில் EPS புகழஞ்சலி செலுத்தியுள்ளார். ஒப்பற்ற துணிவுடனும், நிகரில்லா விவேகத்துடனும் அந்நிய ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பெரும்படை திரட்டிய முதல் பெண் விடுதலைப் போராளி; தமிழினப் பெண்களின் வீரத்திற்கு சான்றாக திகழும் நம் பெரும்பாட்டியார், பேரரசி வீரமங்கை வேலுநாச்சியாரின் தியாகத்தையும், தேச பக்தியையும் போற்றி வணங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.


