News October 10, 2025
நேஷனல் Crush என்பது தற்காலிகமானது: ருக்மணி

நேஷனல் Crush என தன்னை அழைப்பது நன்றாகத்தான் இருக்கிறது; ஆனால் அது தற்காலிகமானதுதான் என நடிகை ருக்மணி வசந்த் தெரிவித்துள்ளார். நேஷனல் Crush என்பது காலத்திற்கு ஏற்றார்போல் மாறக்கூடியது எனவும், ‘சப்த சாகரடாச்ச எல்லோ’ படத்தில் நடித்த ப்ரியா என்ற தன்னுடைய எளிமையான கதாபாத்திரத்தை மக்கள் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ப்ரியா என அழைப்பது தான் தனக்கு பிடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 10, 2025
இதில் உங்களை ஈர்த்த திரைப்படம் எது?

புராணங்கள், நாட்டுப்புறக் கதைகள் என ஏராளமான தனித்துவமான கதைகள் இந்தியாவில் உள்ளன. இதனை, கற்பனை கலந்து திரைப்படங்களாக உருவாக்கி வருகின்றனர். இந்த வரிசையில், என்னென்ன திரைப்படங்கள் வெளிவந்துள்ளன என்று தெரியுமா? மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்த படம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 10, 2025
2026 சீசன்: CSK போடும் ஸ்கெட்ச்!

2026 IPL சீசனுக்கு முன்பாக CSK அணியில் இருந்து தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சாம் கரண், டெவான் கான்வே ஆகியோர் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதே நேரத்தில், சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்கவும் முயற்சி நடைபெறுவதாக கூறப்படுகிறது. 2025 சீசனில் CSK 14 போட்டிகளில் 4-ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. 2026 சீசனில் மீண்டும் கோப்பையை குறிவைத்துள்ள CSK-வின் திட்டம் கைகூடுமா?
News October 10, 2025
பள்ளி மாணவர்களுக்கு மாதம் ₹1,500.. நாளை ரெடியா இருங்க

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ₹1,500 வழங்கும் திறனறித் தேர்வு நாளை நடைபெறவுள்ளது. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளில் இருந்தும் 2,70,508 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். மாநிலம் முழுவதும் 950 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இதில், தேர்வு செய்யப்படும் 1,500 மாணவர்களுக்கு, பள்ளி கல்வி இயக்ககம் மூலம் 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ₹1,500 வழங்கப்பட உள்ளது. தேர்வெழுதும் மாணவர்களுக்கு லைக் போட்டு வாழ்த்து கூறுங்கள்!