News October 10, 2025

இருமல் சிரப்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறதா?

image

இந்தியாவில் குழந்தை உயிரிழப்புகளுக்கு காரணமான சர்ச்சைக்குரிய இருமல் சிரப்கள் வேறு எந்த நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படவில்லை என <<17956260>>WHO<<>>-க்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், சர்ச்சைக்குரிய Coldrif, Respifresh TR, ReLife ஆகிய 3 இருமல் சிரப்களும் முழுமையாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதேபோல், உற்பத்தியை உடனே நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

Similar News

News December 7, 2025

நடுக்கடலில் படகு கவிழ்ந்து 18 பேர் பலி!

image

கிரேக்கத்தின் கிரீட் தீவு அருகே, புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலியாகினர். 2 பேர் மீட்கப்பட்ட நிலையில், பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆப்பிரிக்கா, ஆசியாவில் இருந்து மோதல்கள் மற்றும் வறுமை காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய பயன்படுத்தப்படும் முக்கிய நுழைவாயிலாக கிரீஸ் உள்ளது. இந்நிலையில், இந்த படகு எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News December 7, 2025

அறிவாலயம் சுடுகாடு மாதிரி: நாஞ்சில் சம்பத்

image

திமுகவை விட தவெகவின் தேர்தல் பணிகள் சிறப்பாக இருப்பதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். மேலும், தவெக அலுவலகம் பிரமாதமாக உள்ளதாக கூறிய அவர், ஆனால், அறிவாலயம் சுடுகாடு மாதிரி இருக்கும் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மேலும், தவெக அலுவலகத்தில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் லேப்டாப் வைத்து தேர்தலுக்கான பணியை செய்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 7, 2025

சற்றுமுன்: விலை தாறுமாறாக குறைந்தது

image

கனமழை காரணமாக கடந்த வாரம் முதல் தொடர்ந்து காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று ₹10 முதல் ₹20 வரை குறைந்துள்ளது. ₹70-க்கு விற்பனையான தக்காளி ₹40-க்கும், வெங்காயம் ₹20-க்கும், உருளைக்கிழக்கு ₹40-க்கும், குடைமிளகாய் ₹40-க்கும், பாகற்காய் ₹35-க்கும், கேரட் ₹50-க்கும், முள்ளங்கி ₹25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளன.

error: Content is protected !!