News October 10, 2025
நாமக்கல் அருகே அதிரடி கைது!

கபிலர்மலை, ரங்கபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 60; விவசாயி இவரது மனைவி சரஸ்வதி, 55; இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் துரைசாமி, 43. நேற்று முன்தினம் இரவு, துரைசாமி குடிபோதையில் பழனிச்சாமி, சரஸ்வதி தம்பதியரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது கைகலப்பாக மாறி, துரைசாமி இரும்பு பைப்பால் சரஸ்வதியை தாக்கியுள்ளார். இது குறித்து புகாரின் பெயல் ஜேடர்பாளையம் போலீசார், துரைசாமியை கைது செய்தனர்.
Similar News
News October 10, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

நாமக்கல்லில் இன்று (அக்.10) தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதும் முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.05 ஆகவே நீடிக்கிறது.
News October 10, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (அக்.10) நாமக்கல்-(தேசிங்கன் -8668105073), வேலூர் – (ரவி – 9498168482), ராசிபுரம் – (சின்னப்பன் -9498169092), குமாரபாளையம் – (செல்வராஜு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News October 10, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (10.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.