News April 15, 2024
39 பந்துகளில் சதம்… புதிய சாதனை

RCB அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிவரும் SRH வீரர் டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் IPL வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த 4 ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கெயில் 30, யூசுப் பதான் 37, டேவிட் மில்லர் 38 பந்துகளில் சதம் அடித்துள்ளனர். இன்றைய போட்டியில் 9 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் பறக்கவிட்டு நடப்பு தொடரில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்துள்ளார் ஹெட்.
Similar News
News August 19, 2025
EPS இத்துடன் நிறுத்த வேண்டும்: அமைச்சர் எச்சரிக்கை

ஆம்புலன்ஸ் விவகாரத்தில் <<17450249>>EPS<<>> இத்துடன் நிறுத்துக் கொள்வது நல்லது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். ஆம்புலன்ஸ் பயணிக்கும் பிரதான சாலைகளில் EPS பிரச்சாரம் செய்வதாகவும், ஆம்புலன்ஸ் ஊழியர்களை மிரட்டுவது அவரது தரத்தை குறைத்துவிடும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். முன்னதாக, இனி தன்னுடைய பிரச்சாரத்திற்கு மத்தியில் ஆம்புலன்ஸ் வந்தால், அதன் டிரைவர் பேஷண்ட் ஆவார் என EPS எச்சரித்து இருந்தார்.
News August 19, 2025
தங்கம் விலை ₹1,680 வரை குறைந்தது

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 10-ம் தேதி சவரனுக்கு ₹75,560-க்கு விற்பனையான தங்கம் விலை, சுமார் ₹1,680 வரை குறைந்து இன்று ₹73,880க்கு விற்பனையாகிறது. 10 நாள்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த வெள்ளி விலையும் இன்று ₹1000 குறைந்துள்ளது. வரும் நாள்களிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையும் சூழல் இருப்பதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News August 19, 2025
5 ரூபாய் டாக்டர் காலமானார்

சென்னையில் ₹5-க்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் வேணி (71) மாரடைப்பால் காலமானார். 1 லட்சத்திற்கும் அதிகமான பிரசவங்களை பார்த்துள்ள இவர், கணவர் இறந்த பின்பு, அவரது ₹5 சேவையை தொடர்ந்து வந்தார். அவருடைய இழப்பை கேட்டு சென்னை மக்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர். முன்னதாக, இவரது கணவர் டாக்டர் ஜெயச்சந்திரன் 48 ஆண்டுகளாக ₹5-க்கு மருத்துவம் பார்த்து வந்த நிலையில், கடந்த 2018-ல் காலமானார்.