News October 10, 2025
தங்க தாரகையே ஸ்ரத்தா ஸ்ரீநாத்

‘நேர்கொண்ட பார்வை’, ‘இறுகப்பற்று’, ‘விக்ரம் வேதா’-ல் கவனம் ஈர்த்த ஸ்ரத்தா ஸ்ரீநாத் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் புகைப்படங்கள் பதிவிடுபவர். அந்த வகையில், இம்முறை அவர் பதிவிட்ட போட்டோக்களை பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள் யாஞ்சி யாஞ்சி பாடலை ரிபீட் மோடில் பாடி வருகின்றனர். இவர் நடித்துள்ள ‘தி கேம்’ வெப் தொடரும் சமீபத்தில் வெளியானது. ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்ததில் உங்களுக்கு பிடித்த படம்?
Similar News
News December 9, 2025
‘வந்தே மாதரம்’ இஸ்லாமுக்கு எதிரானது அல்ல: ராஜ்நாத் சிங்

‘வந்தே மாதரம்’ மற்றும் அப்பாடலை கொண்டுள்ள ‘ஆனந்த் மடம்’ நாவல், இஸ்லாம் மதத்திற்கு எதிரானது அல்ல என ராஜ்நாத் சித் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ஆங்கிலேய அழுத்தத்தின் கீழ் அன்றைய வங்காள நவாப் மக்களை சுரண்டினார். மக்களின் வலியையே அந்த நாவல் பிரதிபலித்தது. ஆனால், சுதந்திரத்திற்கு பிறகு அது அரசால் குறிவைக்கப்பட்டு, வந்தே மாதரத்தின் ஆன்மா நீக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
News December 9, 2025
பணக்காரர் வன்கொடுமை செய்தால் குற்றமற்றவரா?

<<18502901>>நடிகை பலாத்கார வழக்கில்<<>> கேரள அரசின் செயல்பாட்டை பாடகி சின்மயி வரவேற்றுள்ளார். குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களை ஜாமினில் வெளியேற்ற முயற்சிப்பதற்கு பதிலாக கேரள அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது பாராட்டத்தக்கது. ஒருவர் பணக்காரராக இருந்தால், தனக்கு பிடிக்காத பெண்ணை, அடியாட்களை அனுப்பி வன்கொடுமை செய்துவிட்டு, குற்றமற்றவர் என நீதி வாங்கி விட முடிவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 9, கார்த்திகை 23 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 7.30 PM – 8.30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.


