News October 10, 2025
ரயில்வேயில் 5,800 வேலைவாய்ப்பு

ரயில்வேயில் காலியாக உள்ள 5,800 என்.டி.பி.சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் சூப்பர்வைசர், சரக்கு ரயில் மேலாளர், ஸ்டேஷன் மாஸ்டர், டைப்பிஸ்ட், சீனியர் கிளர்க் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு டிகிரி கல்வித் தகுதி போதுமானது. 33 வயதுக்கு உட்பட்டவர்கள், நவ.20-ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கும்.
Similar News
News October 10, 2025
கொள்கையற்ற கூட்டம் உருவாகியுள்ளது: உதயநிதி

தமிழகத்தில் தற்போது கொள்கையற்ற கூட்டம் உருவாகியுள்ளதாக தவெகவை உதயநிதி மறைமுகமாக சாடியுள்ளார். இந்த கொள்கையற்ற கூட்டத்தை கொள்கைமயப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டியது நமது (திமுக) கடமை என்று தெரிவித்துள்ளார். பெரியாரின் வழியில் தமிழகத்தை கொள்கை கொண்ட மாநிலமாக எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கரூர் துயர வழக்கிலிருந்தே தவெகவை கடுமையாக விமர்சித்து வருகிறார் உதயநிதி.
News October 10, 2025
அக்.16-ல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது

அக்.16 – 18-ம் தேதிக்குள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்று IMD தெரிவித்துள்ளது. குறிப்பாக, வட மாவட்டங்களில் இயல்பை விட அதிகமான மழை பொழியும் என்றும் கணித்துள்ளது. மேலும், தீபாவளி நாளில் மழை பெய்யுமா என்பதை 5 நாள்களுக்கு முன்பு தான் கூற முடியும் என IMD தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார். அக்.1 முதல் இன்று வரை வழக்கத்தை விட (17 செ.மீ) குறைந்த அளவே (5 செ.மீ) மழை பெய்துள்ளது.
News October 10, 2025
ஆச்சரியம் ஆனால் உண்மை..!

நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன. இயற்கையின் அதிசயங்களும், அறிவியலின் உண்மைகளும் பின்னிப் பிணைந்ததுதான் இந்த பூமி. இவற்றை நாம் அறியும் போது, அவை நமக்கு பல விதமான உணர்வுகளை தருகின்றன. அந்தவகையில், விநோதமாக தோன்றும் அதே சமயத்தில் அறிவியல் உண்மையாகவும் இருக்கும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை அறிந்து கொள்ளுங்கள்.