News October 10, 2025

கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க அழைப்பு ஆட்சியர் தகவல்

image

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பி.வ. மி.பி.வ. மற்றும் சீ.ம. மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவம் இக்கழக இணையதள முகவரியில் (www.tabcedco.tn.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தகவல் அளித்துள்ளார்.

Similar News

News October 10, 2025

தென்காசி: கணவன் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி – கணவன் பலி

image

கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பருவக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் போஸ் (49). இவரது நடத்தையில் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டதால் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து கணவன் போஸ் மீது வெந்நீரை அவரது மனைவி ஊற்றியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த போஸ் நேற்று அக் 10ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் விசாரணை.

News October 10, 2025

தென்காசி: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தென்காசி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News October 10, 2025

தென்காசி: ஆட்டோ மீது பைக் மோதி ஒருவர் பலி

image

தென்காசி, கடையம் அருகே சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த ஜீவா (22) மற்றும் முத்துக்குமார் (25) ஆகியோர் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகின்றனர். வி.கே.புரத்தில் இருந்து பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தபோது ஆழ்வார்குறிச்சி மெயின் ரோட்டில் ஆட்டோ மீது பைக் மோதியதில் ஜீவா பலத்த காயமடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுக்குறித்து போலீசார் விசாரணை.

error: Content is protected !!