News October 9, 2025
வார், பதான் பட நடிகர் காலமானார்

நடிகரும், பாடி பில்டருமான வரீந்தர் சிங் குமான்(42) உயிரிழந்த சம்பவம் பாலிவுட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. BICEP காயத்திற்காக ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவந்த அவர், மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 2009-ல் ‘மிஸ்டர் இந்தியா’ பட்டம் வென்ற அவர், பஞ்சாபி படங்கள் மூலம் திரையுலகில் நுழைந்தார். ஹிந்தியில் பதான், வார், டைகர் 3 உள்ளிட்ட முக்கியமான படங்களிலும் குமான் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. RIP
Similar News
News October 10, 2025
மழைக்காலத்தில் முடி கொட்டுதா.. இதை சாப்பிடுங்க!

சும்மாவே எனக்கு முடி கொட்டுது என வருத்தப்படுபவர்களுக்கு காற்றிலுள்ள ஈரப்பதத்தின் காரணமாக முடி கொட்டுவது மழைக்காலத்தில் அதிகரிக்கவே செய்கிறது . இதனை தவிர்க்க சாப்பிட வேண்டிய பெஸ்ட் டாப் 7 உணவுகளை மேலே பட்டியலிட்டுள்ளோம். இது உங்களின் முடி கொட்டும் பிரச்னையை தவிர்க்க உதவும். இவற்றால், முடி உதிர்வு முற்றிலுமாக நின்றுவிடும் என குறிப்பிடவில்லை. முடி கொட்டுவது கொஞ்சம் குறையும். SHARE IT.
News October 10, 2025
கில் பெற்ற முதல் வெற்றி.. கலாய்த்த வீரர்கள்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது போட்டியில் இந்தியா டாஸ் வென்றது. டெஸ்ட் கேப்டனாக கில் ஆனதும், பெற்ற முதல் டாஸ் வெற்றி இதுவாகும். கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், தொடர்ந்து 6 முறை தோல்வியை சந்தித்தார். இன்று டாஸில் வென்றதும் புன்னகை ததும்ப கில் வருவதும், கம்பீர் மற்றும் இந்திய அணி வீரர்கள் அவரை கைகொடுத்து கலாய்க்கும் போட்டோக்களும் வைரலாகி வருகிறது.
News October 10, 2025
இன்று ஒரே நாளில் ₹3,000 விலை மாறியது

தங்கம் விலை இன்று குறைந்த போதிலும், வெள்ளி விலை கிலோவுக்கு ₹3,000 அதிகரித்துள்ளது. இதனால், 1 கிராம் ₹180-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,80,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலையில் ஏற்பட்டு வரும் மாற்றம் காரணமாக பலரும் வெள்ளியில் முதலீடு மற்றும் ஆபரணங்கள் வாங்கத் தொடங்கியதால் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.