News October 9, 2025
சற்றுநேரத்தில் தொடங்குகிறது ‘கர்வா செளத்’

வடமாநிலங்களில் கொண்டாடப்படும் கர்வா செளத் பண்டிகை, தற்போது தென் மாநிலங்களிலும் பிரபலமாகி வருகிறது. முழுநிலவு கழிந்த 4-ம் நாள் (இன்றிரவு 10:54 PM தொடங்கி நாளை 07:38 PM-க்கு முடிவடையும்) இது கொண்டாடப்படுகிறது. கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டி, காலை முதல் மாலைவரை விரதம் இருந்து மனைவியர் நோன்பு இருப்பர். பின், நிலவையும் கணவரையும் சல்லடை மூலம் பார்த்த பின் தண்ணீர் குடித்து நோன்பை முடிக்கின்றனர்.
Similar News
News October 10, 2025
இராம்நாடு: டிகிரி இருந்தால் ரயில்வே வேலை!

இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 368 துறை கட்டுப்பாட்டாளர் (Section Controller) பணிக்கு 368 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 -33 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதியாக ஏதாவதொரு டிகிரி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
News October 10, 2025
Live-In உறவில் பெண்கள் 50 துண்டுகளாக வெட்டப்படுவர்

Live-In ரிலேசன்ஷிப் தற்போது டிரெண்ட்டாக இருப்பதாக உ.பி. கவர்னர் ஆனந்திபென் படேல் தெரிவித்துள்ளார். Live-In ரிலேசன்ஷிப்பினால் இப்போதுள்ள இளம்பெண்கள் 15-20 வயதில் குழந்தை பெறுவதாகவும், இதை பார்க்கும்போது வேதனையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், Live-In உறவில் இருந்து பெண்கள் விலகியிருக்க வேண்டும், இல்லையென்றால் 50 துண்டுகளாக வெட்டப்பட்டு கொல்லப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
News October 10, 2025
IND Vs WI: இந்தியா பேட்டிங்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்த 2-வது போட்டியிலும் வென்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட் வாஷ் செய்ய இந்திய அணி முயற்சிக்கும். ஆனால், இப்போட்டியில் வென்று, முதல் போட்டியின் தோல்விக்கு பழிதீர்க்கவும், தொடரை சமன் செய்யவும் வெஸ்ட் இண்டீஸ் அணி போராடும். முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் + 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.