News October 9, 2025
விஜய்க்கு நாளை முக்கியமான நாள்

ஐகோர்ட்டின் கடும் கண்டனங்களை எதிர்கொண்ட விஜய், சுப்ரீம் கோர்ட்டின் கதவுகளை தட்டியுள்ளார். கரூர் துயரம் குறித்து ஓய்வுபெற்ற SC நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என தவெக தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இரு நீதிபதிகள் அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. SC அளிக்கும் உத்தரவின்பேரில், விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News October 10, 2025
பாஜகவில் இருந்து Ex மத்திய அமைச்சர் விலகல்

Ex மத்திய அமைச்சரும், அஸ்ஸாம் மாநில பாஜக மூத்த தலைவருமான ராஜேன் கோஹைன் உள்பட 17 முக்கிய நிர்வாகிகள் பாஜகவிலிருந்து விலகினர். 2016 – 19ல் ரயில்வே இணையமைச்சராகவும், நாகேன் தொகுதியில் தொடர்ந்து 4 முறை MP-யாகவும் இருந்தவர். பழங்குடியின மக்களுக்கு BJP துரோகம் செய்துவிட்டதாகவும், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது.
News October 10, 2025
சமூகத்தில் வெறுப்பை RSS கூர்மைபடுத்துகிறது: ராகுல்

சாதிய பாகுபாட்டால் ஹரியானாவில் IPS அதிகாரி பூரன் குமார் தற்கொலை செய்துகொண்டார். ஒரு அதிகாரிக்கே இந்த நிலை என்றால், சாதாரண தலித் மக்கள் எதிர்கொள்ளும் வலியை கொஞ்சம் யோசித்து பாருங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சமூகத்தில் வெறுப்பையும், மனுவாத சிந்தனைகளையும் பாஜக, RSS கூர்மைபடுத்தி வருவதாகவும், இந்திய சமூகங்கள் பிரிவினையின் உச்சத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News October 10, 2025
பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி அலர்ட்

பிலிப்பைன்ஸில் நள்ளிரவில் 7.4 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த செப்.30-ம் தேதி 6.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 74 உயிரிழந்தனர். அதேபோல், மக்களின் உடமைகளும் கடும் சேதத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.