News October 9, 2025
கைரேகை மூலம் UPI.. எப்படி செய்வது?

இனிமேல் UPI கட்டணங்களை PIN உள்ளீடு இல்லாமல், கைரேகை (Fingerprint) (அ) முக அடையாளம் (Face ID) மூலம் மட்டுமே பணம் செலுத்தும்முறை படிப்படியாக அமலுக்கு வரும். இதற்கு, முதலில், UPI செயலியை (PhonePe, GPay, Paytm) அப்டேட் செய்யவும். செயலியின் Settings-ல் சென்று பயோமெட்ரிக் அங்கீகாரம் (Biometric Authentication) அம்சத்தை இயக்கவும். பின்னர், அதை உங்கள் ஸ்மார்ட்போனின் பயோமெட்ரிக் உடன் இணைக்கவும். SHARE IT.
Similar News
News October 10, 2025
அமைதிக்கான நோபல் பரிசை வென்ற USA அதிபர்கள்

7 போர்களை நிறுத்தியதால் தனக்குதான் அமைதிக்கான நோபல் பரிசை கொடுக்கவேண்டும் என டிரம்ப் கூறிவருகிறார். ஒருவேளை அவருக்கு அந்த பரிசு வழங்கப்பட்டால், அதை வாங்கும் முதல் USA அதிபர் இவர் கிடையாது. ஏற்கனவே பல USA-வின் அதிபர் அமைதிக்கான நோபல் பரிசை வாங்கியுள்னர். அவர்கள் யார்யார் என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News October 10, 2025
பாஜகவில் இருந்து Ex மத்திய அமைச்சர் விலகல்

Ex மத்திய அமைச்சரும், அஸ்ஸாம் மாநில பாஜக மூத்த தலைவருமான ராஜேன் கோஹைன் உள்பட 17 முக்கிய நிர்வாகிகள் பாஜகவிலிருந்து விலகினர். 2016 – 19ல் ரயில்வே இணையமைச்சராகவும், நாகேன் தொகுதியில் தொடர்ந்து 4 முறை MP-யாகவும் இருந்தவர். பழங்குடியின மக்களுக்கு BJP துரோகம் செய்துவிட்டதாகவும், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது.
News October 10, 2025
சமூகத்தில் வெறுப்பை RSS கூர்மைபடுத்துகிறது: ராகுல்

சாதிய பாகுபாட்டால் ஹரியானாவில் IPS அதிகாரி பூரன் குமார் தற்கொலை செய்துகொண்டார். ஒரு அதிகாரிக்கே இந்த நிலை என்றால், சாதாரண தலித் மக்கள் எதிர்கொள்ளும் வலியை கொஞ்சம் யோசித்து பாருங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சமூகத்தில் வெறுப்பையும், மனுவாத சிந்தனைகளையும் பாஜக, RSS கூர்மைபடுத்தி வருவதாகவும், இந்திய சமூகங்கள் பிரிவினையின் உச்சத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.