News October 9, 2025

BREAKING: விஜய் முடிவு இதுதான்

image

தவெகவுடன் கூட்டணி பேச்சு நடைபெறுவதாக பரப்புரையில் EPS சூசகமாக கூறியது தமிழக அரசியலில் பேசுபொருளானது. இந்நிலையில், தவெக தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்து போட்டியிடுவதுதான் கட்சித் தலைவர் விஜய்யின் முடிவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. EPS-க்கு ஏமாற்றம்தான் மிஞ்சுமோ?

Similar News

News October 10, 2025

அமைதிக்கான நோபல் பரிசை வென்ற USA அதிபர்கள்

image

7 போர்களை நிறுத்தியதால் தனக்குதான் அமைதிக்கான நோபல் பரிசை கொடுக்கவேண்டும் என டிரம்ப் கூறிவருகிறார். ஒருவேளை அவருக்கு அந்த பரிசு வழங்கப்பட்டால், அதை வாங்கும் முதல் USA அதிபர் இவர் கிடையாது. ஏற்கனவே பல USA-வின் அதிபர் அமைதிக்கான நோபல் பரிசை வாங்கியுள்னர். அவர்கள் யார்யார் என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News October 10, 2025

பாஜகவில் இருந்து Ex மத்திய அமைச்சர் விலகல்

image

Ex மத்திய அமைச்சரும், அஸ்ஸாம் மாநில பாஜக மூத்த தலைவருமான ராஜேன் கோஹைன் உள்பட 17 முக்கிய நிர்வாகிகள் பாஜகவிலிருந்து விலகினர். 2016 – 19ல் ரயில்வே இணையமைச்சராகவும், நாகேன் தொகுதியில் தொடர்ந்து 4 முறை MP-யாகவும் இருந்தவர். பழங்குடியின மக்களுக்கு BJP துரோகம் செய்துவிட்டதாகவும், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது.

News October 10, 2025

சமூகத்தில் வெறுப்பை RSS கூர்மைபடுத்துகிறது: ராகுல்

image

சாதிய பாகுபாட்டால் ஹரியானாவில் IPS அதிகாரி பூரன் குமார் தற்கொலை செய்துகொண்டார். ஒரு அதிகாரிக்கே இந்த நிலை என்றால், சாதாரண தலித் மக்கள் எதிர்கொள்ளும் வலியை கொஞ்சம் யோசித்து பாருங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சமூகத்தில் வெறுப்பையும், மனுவாத சிந்தனைகளையும் பாஜக, RSS கூர்மைபடுத்தி வருவதாகவும், இந்திய சமூகங்கள் பிரிவினையின் உச்சத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!