News October 9, 2025

மேம்பாலத்திற்கு சாதிப் பெயர் ஏன்? சீமான்

image

கோவையில் திறக்கப்பட்ட மேம்பாலத்துக்கு ஜிடி நாயுடுவின் பெயர் வைக்கப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிலும் சாதிப்பெயர்கள் இருக்கக்கூடாது என்று பேசிய திமுக, ஜி.டி.நாயுடு என்ற சாதிப்பெயரைச் சூட்டுவது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார். மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை நீக்கிவிட்டு, கொங்கு மக்களின் பெருமைகளாகத் திகழும் தீரன் சின்னமலை போன்றவர்களின் பெயரை வைக்க வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News October 10, 2025

தவெகவுக்கு வலை விரிக்கும் பாஜக, காங்கிரஸ்?

image

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு பாஜக, காங்கிரஸ் இரண்டுமே விஜய்க்கு ஆதரவு கரங்களை நீட்டியுள்ளன. திமுக 2-ம் கட்ட தலைவர்கள், தவாக, விசிக விஜய்யை தாக்கி பேசினாலும், கூட்டணியில் உள்ள காங்., தலைவர்கள் மென்மையான போக்கையே கடைபிடிக்கின்றனர். இதுஒருபுறம் இருக்க பாஜக, அதிமுக தலைவர்கள் அடுத்தடுத்து விஜய்க்கு ஆதரவாக நேரடியாகவே பேசி வருகின்றனர். இது, கூட்டணி வலைக்கான சமிக்ஞை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

News October 10, 2025

அதிக விமான நிலையங்கள் கொண்ட நாடுகள்

image

எந்த ஒரு நாட்டுக்கு பயணிக்கவும் விமான போக்குவரத்து சேவையே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் உலகளவில் அதிக விமான நிலையங்கள் கொண்ட நாடுகளை இங்கே தெரிஞ்சுக்கோங்க. இப்பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதில் இந்தியா எத்தனையாவது தெரியுமா? Swipe செய்து பார்க்கவும்.

News October 10, 2025

இந்த பிரச்சனை இருந்தா முள்ளங்கிய சாப்பிட்டுறாதீங்க

image

முள்ளங்கியில் நார் சத்து அதிகமாக இருப்பதால் அதனை சாப்பிடுவது உடலுக்கு சிறந்ததுதான். ஆனால், தைராய்டு பிரச்னை இருப்பவர்கள் இதனை தொடவே கூடாது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இது உங்களுடைய பிரச்னையை மேலும் அதிகரிக்க செய்யுமாம். எனவே மருத்துவரிடம் ஆலோசித்து, உங்கள் உடல்நிலைக்கு ஏற்ப முள்ளங்கியை எடுத்துக்கொள்ளுங்கள். பயனுள்ள தகவலை அனைவருக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!