News October 9, 2025

இந்த அரிதான Blood Group உங்களுக்கு இருக்கா?

image

உலகில் 40–50 பேருக்கு மட்டுமே ‘Golden Blood’ (Rh null) எனும் Blood Group உள்ளது. இவ்வகை ரத்தத்தில் Rh ஆன்டிஜென்கள் இல்லாததே இதனை அரிதாக்குகிறது. Rh null ரத்த வகையினரின் உடல் மற்ற ரத்த வகைகளை ஏற்காது. எனவே, சர்ஜரிகளுக்கு முன்பாக உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து, டாக்டர்கள் அதனை Freeze செய்கின்றனர். தகவல் பிடித்திருந்தால் லைக் பண்ணலாமே!

Similar News

News October 10, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 484 ▶குறள்: ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின். ▶பொருள்: ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.

News October 10, 2025

எம்ஜிஆர், வ.உ.சி பெயர்கள் எங்கே? அதிமுக

image

தெருக்கள், சாலைகளில் உள்ள ஜாதி பெயர்களை நீக்கும் விஷயத்தில், தமிழகத்திற்கு அடையாளமாக திகழும் தலைவர்களை காழ்ப்புணர்ச்சியுடன் திமுக புறக்கணிப்பதாக அதிமுக சாடியுள்ளது. மாற்றுப் பெயர் பட்டியலில் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்கள் இடம்பெறவில்லை என்றும் தீரன் சின்னமலை, இரட்டைமலை சீனிவாசன், வ.உ.சி உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் இடம்பெறாதது ஏன் எனவும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

News October 10, 2025

கரூர் துயரில் உண்மை வெளிவர வேண்டும்: பிசி ஸ்ரீராம்

image

கரூர் துயரில் யார் மீது தவறு இருந்தாலும் உண்மை வெளிவர வேண்டும் என பிசி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்தை பற்றி பயமின்றி உரக்கப் பேச வேண்டும் என்றும் காலங் கடந்தால் உண்மை சிதைந்துவிடும் எனவும் அவர் X-ல் பதிவிட்டுள்ளார். மேலும், இதில் பேச்சு சுதந்திரம் இருக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!