News October 9, 2025

நெல்லை: ரூ.40,000த்தில் அரசு வேலை.. தேர்வு இல்லை.,

image

நெல்லை மக்களே, மாவட்ட சுகாதார சங்கத்தில் 42 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி 8th, 10th, B.Com, டிப்ளமோ, அறிவியல் துறை சார்ந்த டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ40,000 வரை சம்பளம் வழங்கப்படும்; இதற்கு தேர்வு இல்லை. விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.14ம் தேதி. மேலும் விவரங்களுக்கு <>கிளிக்<<>> செய்யவும்.

Similar News

News October 10, 2025

நெல்லை மாநகராட்சிக்கு ரூ.1.55 கோடி அபராதம்?

image

திருநெல்வேலி மாநகராட்சி, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை தாமிரபரணி நதிக்குள் வெளியேற்றியதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) கண்டறிந்துள்ளது. இந்தச் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்காக மாநகராட்சிக்கு ரூ.1.55 கோடி சுற்றுச்சூழல் இழப்பீடு விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது

News October 10, 2025

நெல்லையில் கல்லூரிகளுக்கு விடுமுறை

image

திருநெல்வேலி மாவட்டம் திடியூரில் செயல்படும் பி.எஸ்.என்., தனியார் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் குடிநீர் மாசுபாட்டால் மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குடிநீரை சீர் செய்யும் வரை அங்குள்ள 5 கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News October 10, 2025

நெல்லை: ரேசன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு!

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டையில் உள்ள குறைபாடுகளை கலைவதற்கும் பெயர் சேர்த்தல் நீக்குதல் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு மனு செய்தல் உள்ளிட்ட மக்களின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர் கூட்டம் வருகின்ற சனிக்கிழமை 11ம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!