News October 9, 2025
கரூர் துயரம்: சற்றுமுன் அதிரடியாக கைது

கரூர் துயர சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை சூடுபிடித்துள்ளது. சம்பவத்தின்போது ஆம்புலன்ஸை வழிமறித்து டிரைவரை தாக்கியதாக தவெக சேலம் மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகனை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் 2 நாள்கள் விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
Similar News
News October 10, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 10, 2025
பிஹாரின் அரசியல் முக்கியத்துவம்: PHOTOS

குறைவான கல்வியறிவு, அதிகமான வன்முறை, மோசமான நிர்வாகத்துக்கு பிஹாரை உதாரணம் காட்டுவது பொதுபுத்தியாக உள்ளது. நாட்டின் 3-வது பெரிய மாநிலமான பிஹார், ஆன்மிக, கலாசார, அரசியல்ரீதியாக இந்திய வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது. புத்த, சமண மதங்கள் தோன்றிய அங்கு தான் உலகப் புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகமும் நிறுவப்பட்டது. பிஹாரில் நிகழ்ந்த 3 முக்கிய அரசியல் நிகழ்வுகளை மேலே ஸ்வைப் செய்து பாருங்க.
News October 10, 2025
இந்தியா – UK பேச்சுவார்த்தை: முக்கிய அம்சங்கள்

இந்தியா- UK இடையேயான தடையற்ற வணிக ஒப்பந்தத்தின் அடிப்படையில் பின்வரும் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. *இந்தியாவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும் *2030-க்குள் இருநாடுகள் இடையிலான வர்த்தகத்தை ₹4.97 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு *பிரிட்டனின் ஒன்பது முன்னணி பல்கலை.,கள் இந்தியாவில் கிளையை நிறுவும் *பாலிவுட் படங்களை பிரிட்டனில் தயாரிக்க திட்டம்.