News October 9, 2025

உலகில் வேஸ்ட் என எதுவும் இல்லை: நிதின் கட்கரி

image

2027-க்குள் திடக்கழிவுகளை பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த உலகில் எதுவுமே வேஸ்ட் இல்லை எனவும், டெக்னாலஜி மற்றும் தலைமை பண்பால் அதை பயன்படும் பொருளாக மாற்ற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில், உலக ஆட்டோமொபைல் உற்பத்தியில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறும் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 10, 2025

NDA கூட்டணியில் தவெக? அண்ணாமலை திட்டவட்டம்

image

கூட்டணிக்கு பிள்ளையார்சுழி போடப்பட்டு விட்டதாக EPS கூறிய நிலையில், NDA கூட்டணியில் தவெக இணையுமா என அண்ணாமலையிடம் கேட்கப்பட்டது. 2 கட்சிகளின் சித்தாந்தங்களும் வேறு வேறு பாதையில் உள்ளபோது, எப்படி ஒரே நேர்கோட்டில் பயணிக்க முடியும் என்று கேள்வியெழுப்பியுள்ளார். அதேநேரம், தேர்தலுக்கு காலம் உள்ளதால், பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அண்ணாமலை சஸ்பென்ஸ் வைத்துள்ளார். NDA கூட்டணியில் தவெக இணையுமா?

News October 10, 2025

நாராயணா நாராயணா அப்டினு சொல்லுங்க.. ரஜினிகாந்த்

image

‘ஜெயிலர் 2’ ஷூட்டிங்கிற்கு இடையில் இமயமலை பயணம் மேற்கொண்டுள்ளார் ரஜினிகாந்த். அங்கு பத்ரிநாத் கோயிலுக்கு சென்றபோது அவரை சூழ்ந்த பக்தர்கள், ‘ரஜினி சாபு ரஜினி சாபு’ என அன்போடு அழைத்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த ரஜினி, ‘என் பெயரை சொல்லாதீங்க, நாராயணா நாராயணா என்று சுவாமி நாமத்தை சொல்லுங்கள்’ என கூறியதாக அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி தற்போது வைரலாகிறது.

News October 10, 2025

ராசி பலன்கள் (10.10.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க

error: Content is protected !!