News October 9, 2025
மாமனிதர் ரத்தன் டாடாவின் நினைவு நாள்

இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று. டாடா நிறுவனத்தை உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றியவர். அதைவிட, அவரது எளிமை, கொடை உணர்வு, சிறந்த தலைவருக்கான பண்பு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. புகழ்ச்சியை எப்போதும் விரும்பாத ரத்தன் டாடா, அதி தீவிர உழைப்பாளி. தனது நிறுவன ஊழியர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டவர். அவரிடம் உங்களுக்கு பிடித்ததை கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News October 10, 2025
சூப்பர் ஃபுட் முருங்கையின் பயன்கள்

‘சூப்பர் ஃபுட்’ என அழைக்கப்படும் முருங்கை, உடலுக்கு பல வகையான சத்துக்களை வழங்கி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. முருங்கை இலைகளும், முருங்கைக்காயும் எண்ணற்ற நன்மைகளை வழங்குகின்றன. முருங்கையின் முக்கிய நன்மைகளை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்கள். இதில் இல்லாத வேறு ஏதேனும் நன்மைகள் உங்களுக்கு தெரியுமா? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 10, 2025
NDA கூட்டணியில் தவெக? அண்ணாமலை திட்டவட்டம்

கூட்டணிக்கு பிள்ளையார்சுழி போடப்பட்டு விட்டதாக EPS கூறிய நிலையில், NDA கூட்டணியில் தவெக இணையுமா என அண்ணாமலையிடம் கேட்கப்பட்டது. 2 கட்சிகளின் சித்தாந்தங்களும் வேறு வேறு பாதையில் உள்ளபோது, எப்படி ஒரே நேர்கோட்டில் பயணிக்க முடியும் என்று கேள்வியெழுப்பியுள்ளார். அதேநேரம், தேர்தலுக்கு காலம் உள்ளதால், பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அண்ணாமலை சஸ்பென்ஸ் வைத்துள்ளார். NDA கூட்டணியில் தவெக இணையுமா?
News October 10, 2025
நாராயணா நாராயணா அப்டினு சொல்லுங்க.. ரஜினிகாந்த்

‘ஜெயிலர் 2’ ஷூட்டிங்கிற்கு இடையில் இமயமலை பயணம் மேற்கொண்டுள்ளார் ரஜினிகாந்த். அங்கு பத்ரிநாத் கோயிலுக்கு சென்றபோது அவரை சூழ்ந்த பக்தர்கள், ‘ரஜினி சாபு ரஜினி சாபு’ என அன்போடு அழைத்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த ரஜினி, ‘என் பெயரை சொல்லாதீங்க, நாராயணா நாராயணா என்று சுவாமி நாமத்தை சொல்லுங்கள்’ என கூறியதாக அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி தற்போது வைரலாகிறது.