News October 9, 2025
இருமல் சிரப் விவகாரம்: விளக்கம் கேட்கும் WHO

குழந்தைகள் உயிரிழப்பை ஏற்படுத்திய <<17955764>>இருமல் சிரப்<<>>, பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டதா என்பது குறித்து இந்திய அதிகாரிகளிடம் WHO விளக்கம் கேட்டுள்ளது. இந்தியா தரும் விளக்கத்தை பொறுத்து, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட ‘Coldrif’ இருமல் சிரப் குடித்து ம.பி., ராஜஸ்தானில் 21 குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 9, 2025
குழந்தைங்க ரொம்ப ஒல்லியா இருக்காங்களா? இத கொடுங்க

குழந்தைகள் ஒல்லியாகவோ, குண்டாகவோ இருப்பது பிரச்னை இல்லை. அவர்கள் ஹெல்தியாக இருப்பதே அவசியம். அவர்களுக்கு பொட்டுக்கடலை உருண்டை செய்துகொடுங்கள். ➤பொட்டுக்கடலையை லேசாக வறுத்துக் கொள்ளுங்கள் ➤அதை நன்கு ஆற வைத்து பொடியாக்கி அதில் வெல்லம் & தேங்காய் துருவலை சேர்க்கவும் ➤உருண்டைகளாக உருட்டி, காற்று புகாத டப்பாவில் வையுங்கள். ➤தினமும் 1 உருண்டையை கொடுத்தால் தேவையான புரத சத்து கிடைக்கும். SHARE.
News October 9, 2025
காயமடைந்த வீராங்கனைக்கு ஊக்கம் தந்த தோனி

இந்திய மகளிர் அணிக்கு பேட்டிங்கில் முக்கிய வீராங்கனையாக இருப்பவர் ஹர்லீன் தியோல். இவருக்கு WPL-ல் விளையாடியபோது காயம் ஏற்பட்டது. இதனால் கிரிக்கெட்டில் இருந்து சற்று ஒதுங்கியிருக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். அந்த சமயத்தில் தோனி ஹர்லீனை தொடர்புகொண்டு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசியுள்ளார். தோனியுடனான அந்த கலந்துரையாடல் அடுத்த கட்டத்துக்கு நகர பெரும் உதவியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
News October 9, 2025
ஆச்சரியம் நிறைந்த பிரேசில்.. சுவாரஸ்யமான தகவல்கள்

பிரேசில் மக்கள் மற்றும் அவர்களின் கலாசாரம் மிகவும் வித்தியாசமானது. இசை, நடனம், விளையாட்டு, உணவு ஆகியவை அவர்களின் கலாச்சாரத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளன. கால்பந்து காதலர்கள், சுதந்திரமான வாழ்க்கை, என பிரேசிலியர்களின் தனிச்சிறப்புகள் ஏராளமாக உள்ளன. சில சுவாரஸ்யமான விஷயங்களை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக பாருங்க. பிடித்தால் கீழே கமெண்ட் பண்ணுங்க.