News October 9, 2025
நயனின் சினிமா வயது 22 ஆனது.. நெகிழ்ச்சி ❤️❤️

சினிமாவில் 22 ஆண்டுகளை நிறைவு செய்ததை நயன்தாரா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். திரைப்படங்கள் தன் வாழ்க்கையின் காதலாக மாறும் என்று தெரியாமல், கேமரா முன்பு முதல்முறையாக நின்று 22 ஆண்டுகள் ஆகின்றன எனவும், ஒவ்வொரு ஃபிரேமும், ஒவ்வொரு ஷாட்டும், தன்னை வடிவமைத்து உருவாக்கியதாகவும் அவர் பூரிப்படைந்துள்ளார். நயன் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படத்தை கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News October 9, 2025
பாக். ஊர் பெயர்களில் IAF தயாரித்த மெனு

ராவல்பிண்டி சிக்கன் டிக்கா, போலாரி பனீர் மேத்தி மலாய், சர்கோதா தால் மக்கானி, பஹவல்பூர் நான் என்று உணவு பெயர்களுக்கு முன்னால் பாக்., பகுதிகளின் பெயர்களை வைத்தது யார் தெரியுமா? இந்திய விமானப்படை தான். IAF-யின் 93-வது நிறைவு விழாவையொட்டி வழங்கப்படும் விருந்தில் உள்ள மெனு லிஸ்ட் தான் இது. பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் கிடைக்கும் இடங்களிலெல்லாம் சொல்லி அடிப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
News October 9, 2025
தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

தினமும் பழங்கள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஒவ்வொரு பழத்திலும், பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன. என்னென்ன பழங்களில் என்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாமல் வேறு ஏதேனும், சத்து நிறைந்த பழம், உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News October 9, 2025
கைரேகை மூலம் UPI.. எப்படி செய்வது?

இனிமேல் UPI கட்டணங்களை PIN உள்ளீடு இல்லாமல், கைரேகை (Fingerprint) (அ) முக அடையாளம் (Face ID) மூலம் மட்டுமே பணம் செலுத்தும்முறை படிப்படியாக அமலுக்கு வரும். இதற்கு, முதலில், UPI செயலியை (PhonePe, GPay, Paytm) அப்டேட் செய்யவும். செயலியின் Settings-ல் சென்று பயோமெட்ரிக் அங்கீகாரம் (Biometric Authentication) அம்சத்தை இயக்கவும். பின்னர், அதை உங்கள் ஸ்மார்ட்போனின் பயோமெட்ரிக் உடன் இணைக்கவும். SHARE IT.