News October 9, 2025

இந்தியாவுடன் போர் ஏற்பட வாய்ப்பு: பாக். அமைச்சர்

image

இந்தியாவுடன் போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா தெரிவித்துள்ளார். பதற்றங்களை அதிகரிக்க விரும்பவில்லை எனவும், ஆனால் போர் வந்தால், கடந்த காலங்களை விட பாகிஸ்தான் சிறப்பான பதிலடியை கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட, தற்போது பாகிஸ்தானுக்கு அதிக நாடுகள் ஆதரவு தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 9, 2025

AP ஃபார்முலாவில் கூட்டணி ஆட்சி: கார்த்தி சிதம்பரம்

image

ஆட்சியில் காங்., பங்கு கேட்பதில் தவறில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகார லட்சியம் இல்லாவிட்டால், காங்., ஏன் அரசியல் கட்சியாக இருக்க வேண்டும் என கேள்வியெழுப்பினார். AP-யில் சந்திரபாபுவுக்கு மெஜாரிட்டி இருந்தும், கூட்டணி ஆட்சி நடத்துகிறார், ஆனால் 2006-ல் திமுக மைனாரிட்டி ஆட்சி நடத்தியும், காங்கிரஸுக்கு பங்கு தரவில்லை என்றார். அவரது கருத்து பற்றி என்ன நினைக்கிறீங்க?

News October 9, 2025

BREAKING: விஜய் முடிவு இதுதான்

image

தவெகவுடன் கூட்டணி பேச்சு நடைபெறுவதாக பரப்புரையில் EPS சூசகமாக கூறியது தமிழக அரசியலில் பேசுபொருளானது. இந்நிலையில், தவெக தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்து போட்டியிடுவதுதான் கட்சித் தலைவர் விஜய்யின் முடிவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. EPS-க்கு ஏமாற்றம்தான் மிஞ்சுமோ?

News October 9, 2025

இன்பநிதியை வெயிட்டிங்கில் வைக்கிறாரா மாரி செல்வராஜ்?

image

‘கர்ணன்’ படத்துக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே, உதயநிதியின் மகன் இன்பநிதியை ஹீரோவாக வைத்து மாரி படம் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், முதலில் தனுஷ் படத்தை இயக்கிவிட்டு, அடுத்ததாகவே இன்பநிதியை வைத்து மாரி இயக்கவுள்ளாராம். மேலும், இப்படத்தில் ரவுடி பேபியான சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

error: Content is protected !!