News October 9, 2025

சும்மா சும்மா மொபைல பாக்குறீங்களா?

image

மனிதன் போனுக்கு அடிமையாகிவிட்டான் என்றே கூறலாம். வேலையே இல்லை என்றாலும், சும்மா சும்மா போனை எடுத்து பார்ப்பவர்கள் இங்கு அதிகம். இது பல உடல்நல பிரச்னைகளுக்கு ஆளாக்குகிறது. கண் எரிச்சல், தலைவலி, பார்வை குறைவு, கழுத்து – தோள்பட்டை வலி போன்றவற்றை உண்டாக்குகிறது. தூக்கத்தை தரும் மெலட்டோனின் ஹார்மோன் சுரப்பை குறைப்பதுடன், நினைவாற்றலையும் மங்கச் செய்கிறதாம். பாத்து இருந்துக்கோங்க மக்களே!

Similar News

News October 9, 2025

74 வயது பாட்டிக்கும் 34 வயது இளைஞருக்கும் கல்யாணம்❤️❤️

image

துனிசியாவின் ஹம்சாவிற்கு(34), இங்கிலாந்தின் கிறிஸ்டின்(74) ஆன்லைன் மூலம் ஆங்கிலம் கற்றுக் கொடுத்துள்ளார். ஹம்சா கற்றது காதலும்தான். ஒருவருக்கொருவர் மனதை பறிகொடுக்க, இருவரும் திருமண பந்தத்திற்குள் நுழைந்தனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், கிறிஸ்டினுக்கு ஏற்கெனவே திருமணமாகி 1 மகள், 1 மகன் உள்ளனர். இருவரும் ஹம்சாவை விட மூத்தவர்கள். 2018-ல் மலர்ந்த காதல், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

News October 9, 2025

Gold Loan வாங்க போறீங்களா? இத தெரிஞ்சுக்கோங்க

image

அடித்தட்டு மக்களுக்கு மிகவும் எளிதாய் கிடைக்கும் கடன், நகைக்கடன் தான். இதனை வாங்கும்போது வங்கிகள், நிதி நிறுவனங்களின் வட்டி விகிதங்களை அறிந்து கொள்வது முக்கியம். குறைந்த வட்டிக்கு பொதுத்துறை நிறுவனங்களே சிறந்தவை. எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி போடுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள மேலே உள்ள புகைப்படங்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த முக்கிய தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 9, 2025

மேம்பாலத்திற்கு சாதிப் பெயர் ஏன்? சீமான்

image

கோவையில் திறக்கப்பட்ட மேம்பாலத்துக்கு ஜிடி நாயுடுவின் பெயர் வைக்கப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிலும் சாதிப்பெயர்கள் இருக்கக்கூடாது என்று பேசிய திமுக, ஜி.டி.நாயுடு என்ற சாதிப்பெயரைச் சூட்டுவது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார். மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை நீக்கிவிட்டு, கொங்கு மக்களின் பெருமைகளாகத் திகழும் தீரன் சின்னமலை போன்றவர்களின் பெயரை வைக்க வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!