News October 9, 2025

லோன் வாங்கியவர்களுக்கு HAPPY NEWS

image

HDFC வங்கி தனது MCLR வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. குறிப்பிட்ட ஆண்டுகள் வரையான கடன்களுக்கு வட்டி விகிதம் 15 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதால் MCLR இனி 8.40% முதல் 8.65%-மாக இருக்கும். இதனால் பர்சனல், பிசினஸ் மற்றும் ஹோம் லோன் வாங்கியோருக்கு வட்டி / EMI சிறிது குறையும். முன்னதாக SBI வங்கியும் தனது MCLR வட்டி விகிதத்தை 0.5 முதல் 1.5% வரை குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. SHARE

Similar News

News January 12, 2026

இதயத்தை Bag-ல் சுமந்து வாழும் அதிசய பெண்!

image

2017 முதல் இதயம் இல்லாமல் ஒரு பெண் வாழ்கிறார் தெரியுமா? இங்கிலாந்தை சேர்ந்த செல்வா ஹுசைன்(39), Dilated Cardiomyopathy நோயால் பாதிக்கப்பட, அவரின் இதயம் செயலிழந்துள்ளது. இதனால், அவருக்கு செயற்கையாக Mechanical Heart Pump ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. 6 கிலோ எடை கொண்ட செயற்கை இதயத்தை Bag-ல் மாட்டியபடி குடும்பம், பிள்ளைகள் என அனைத்தையும் சாதாரணமாகவே இப்பெண் தொடர்கிறார். மருத்துவத்தின் அதிசயமே!

News January 12, 2026

விஜய் வருகையால் பரபரத்த டெல்லி!

image

கரூர் வழக்கு விசாரணைக்காக இன்னும் சற்று நேரத்தில் டெல்லி CBI அலுவலகத்தில் விஜய் ஆஜராக உள்ளதால் அங்கு காவல்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படக்கூடாது என்பதற்காக மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்களும் CBI ஆபீஸை அலசி ஆராய்கின்றனர். அத்துடன், எந்த இடையூறும் இன்றி விஜய்யின் விமானம் தரையிறங்க VVIP-களுக்கு மட்டுமே வழங்கப்படும் T-4 எண்ட்ரியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

News January 12, 2026

முடிஞ்சா காலை வெட்டுங்க: அண்ணாமலை சவால்

image

மும்பையில் <<18824079>>அண்ணாமலை<<>> பரப்புரை செய்தது பற்றி <<18833309>>ராஜ் தாக்கரே<<>> விமர்சித்திருந்தார். அவருக்கு பதிலடி கொடுத்துள்ள அண்ணாமலை, தாக்கரே சகோதரர்கள் வேலையில்லாமல் சுற்றி கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார். கூட்டம் போட்டு திட்டும் அளவுக்கு தான் வளர்ந்துவிட்டதாக கூறிய அவர், யார் மிரட்டினாலும் மும்பை செல்வேன் என தெரிவித்துள்ளார். ‘மும்பைக்கு வருவேன், முடிந்தால் காலை வெட்டி பாருங்க’ என சவாலும் விடுத்துள்ளார்.

error: Content is protected !!