News October 9, 2025

நயினார் பரப்புரை பயணத்தின் தொடக்க விழாவில் மாற்றம்

image

மதுரையில் வரும் 12-ம் தேதி, நயினார் நாகேந்திரனின் பிரச்சார பயணத்தை ஜெ.பி.நட்டா தொடங்கி வைப்பதாக இருந்தது. இந்நிலையில் நட்டாவின் தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில், நிர்மலா சீதாராமன் இந்த பயணத்தை தொடங்கி வைக்க உள்ளார். நயினார் நாகேந்திரனின் மதுரை பரப்புரைக்கு <<17944148>>15-க்கும் அதிகமான நிபந்தனைகளை<<>> போலீஸ் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 9, 2025

இந்த அரிதான Blood Group உங்களுக்கு இருக்கா?

image

உலகில் 40–50 பேருக்கு மட்டுமே ‘Golden Blood’ (Rh null) எனும் Blood Group உள்ளது. இவ்வகை ரத்தத்தில் Rh ஆன்டிஜென்கள் இல்லாததே இதனை அரிதாக்குகிறது. Rh null ரத்த வகையினரின் உடல் மற்ற ரத்த வகைகளை ஏற்காது. எனவே, சர்ஜரிகளுக்கு முன்பாக உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து, டாக்டர்கள் அதனை Freeze செய்கின்றனர். தகவல் பிடித்திருந்தால் லைக் பண்ணலாமே!

News October 9, 2025

கமல் வீட்டில் பரபரப்பு.. உடனே சென்ற போலீஸ்

image

சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல் வீட்டில் அமைந்துள்ள மநீம தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் உடன் போலீஸார் விரைந்துள்ளனர். முன்னதாக, இன்று காலை விஜய்யின் நீலாங்கரை வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால், சோதனையின் முடிவில் புரளி என தெரியவந்தது. மேலும் மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.

News October 9, 2025

கரூர் செல்வதற்கு கடிதம் எதற்கு? அண்ணாமலை

image

விஜய், கரூர் செல்வதற்கு டிஜிபி அலுவலகம் சென்று கடிதம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூருக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற அவர், துக்க வீட்டிற்கு வருவோரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது கரூர் மக்களுக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார். கரூருக்கு விஜய் வரலாம் என்ற அவர், ஊர் பாதுகாப்பானது தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!