News October 9, 2025
Recipe: பப்பாளிப் பழ அவல் கேசரி செய்யலாம் வாங்க!

வாணலியில் வெள்ளை அவலை நன்றாக வறுத்து, ரவை பதத்தில் அரைத்து தூளாக்கவும். அடிகனமான கடாயில் 2 தேக்கரண்டி நெய், கொதிக்க வைத்த பாலை ஊற்றி, பப்பாளிக் கூழ், சர்க்கரை, பொடித்த அவல், ஏலக்காய் பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறவும். அடுப்பை சிம்மில் வைத்து, இந்த கலவையில் நெய்யில் பொன்னிறமாக வறுத்த முந்திரி, பாதாம், வெள்ளரி விதையை சேர்த்து இறக்கினால் சுவையான பப்பாளிப் பழ அவல் கேசரி ரெடி. SHARE IT.
Similar News
News October 9, 2025
விஷமாக மாறிய மருந்து.. குழந்தையை கொன்ற துயரம்

ம.பி.,யில் இருமல் சிரப் குடித்த திவ்யான்ஷ் (6) உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல் காரணமாக குழந்தையின் தந்தை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, டாக்டர் பரிந்துரைத்த இருமல் சிரப்பை நாளொன்றுக்கு 4 முறை கொடுத்துள்ளார். மருந்து விஷமாக மாறி பிஞ்சு உயிர் பலியாகியுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பட்டியலில், இக்குழந்தை பெயர் இல்லாததால், அரசின் ₹4 லட்சம் நிவாரணமும் கிடைக்கவில்லை.
News October 9, 2025
கரூர் துயரம்: சற்றுமுன் அதிரடியாக கைது

கரூர் துயர சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை சூடுபிடித்துள்ளது. சம்பவத்தின்போது ஆம்புலன்ஸை வழிமறித்து டிரைவரை தாக்கியதாக தவெக சேலம் மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகனை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் 2 நாள்கள் விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
News October 9, 2025
கிரிக்கெட் வாரியங்களின் சொத்து மதிப்பு.. நம்பர் 1 யார்?

கிரிக்கெட் தற்போது விளையாட்டு என்பதை தாண்டி, , மிகப்பெரிய வணிகமாக வளர்ந்துள்ளது. 2025-26-ம் ஆண்டில் கிரிக்கெட் வாரியங்களின் மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா? ஒவ்வொரு கிரிக்கெட் வாரியத்தின் மதிப்பை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்தியாவுக்கு அடுத்து, உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் அணி எது? கமெண்ட்ல சொல்லுங்க.