News April 15, 2024

அரசு அலுவலர்களுக்கு விளக்க பயிற்சி

image

சித்தோடு அடுத்த அரசினர் பொறியியல் கல்லூரியில் மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்கு சேகரிப்பு மைய அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் இதர பொருட்களை தேர்தல் நாளன்று பாதுகாப்பாக வைக்கும் பணிக்கான பயிற்சி இன்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில், தேர்தல் நாளன்று மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

Similar News

News September 16, 2025

ஈரோடு – சம்பல்பூர் சிறப்பு ரயில் நீட்டிப்பு

image

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து காலை 11:35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஈரோடு வரும் சிறப்பு ரயில் (08311) நாளை(செப்.17) முதல் வரும் நவம்பர் 26ஆம் தேதி வரை (வாரந்தோறும் புதன்கிழமை) நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கமாக ஈரோட்டில் இருந்து மதியம் 2:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11:15 மணிக்கு சம்பல்பூர் செல்லும் ரயில் (08312) நவ.28 வரை (வெள்ளி தோறும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

News September 16, 2025

ஈரோடு: கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் மக்கள்!

image

ஈரோடு: அந்தியூர் வனப்பகுதி ஒட்டிய 1500-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று(செப்.15) தாலுகா அலுவலகத்திற்கு முன்பு முற்றுகையிட்டனர். அயன் பட்டா கோரிக்கைக்காக நின்ற மக்களை இரவு 8:00 மணி ஆகியும் கலெக்டர் சந்திக்கவில்லை. ஆகையால், இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு மக்கள் செல்ல முடிவெடுத்துள்ளனர்.

News September 16, 2025

ஈரோடு பிறந்த தினம் இன்று!

image

கோயமுத்தூர் ஜில்லாவில் சிறு கிராமமாக இருந்த ஈரோடு, 16.9.1871ல் ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு நகர பரிபாலன சபை அமைக்கப்பட்டது. தற்போது மாவட்ட தலைநகராக, மாநகராட்சியாக ஈரோடு நகரம் உயர்வடைந்துள்ளது. ஈரோடு நகர சபை உருவாகி 154 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 155-ஆவது ஆண்டு தொடங்குகிறது.

error: Content is protected !!