News October 9, 2025

மகனை அடித்து துன்புறுத்தும் போலீஸ்: வேலூர் இப்ராஹிம்

image

தன் மகன் மீது பொய் வழக்கு போட்டு, போலீசார் அடித்து சித்ரவதை செய்வதாக பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னை அடக்குவதற்கு தனது குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்துவதாகவும், குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி தனது மகனை வற்புறுத்துவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும், தனது மகன் கஞ்சா வைத்திருந்ததை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் தண்டனையை அனுபவிக்கட்டும் என்றும் கூறியுள்ளார்.

Similar News

News October 9, 2025

விஜய்யை நெருக்குகிறார்கள்: முத்தரசன்

image

தவெகவிற்கு வருவது பார்க்க வரும் கூட்டமே தவிர, கேட்க வரும் கூட்டம் அல்ல என்று CPI மூத்த தலைவர் முத்தரசன் விமர்சித்துள்ளார். கரூர் துயர சம்பவத்தை வைத்து விஜய்யை அதிகமாக நெருக்குவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணிக்கு பிள்ளையார்சுழி போடப்பட்டு விட்டதாக தவெக கொடியை பார்த்து EPS பேசியது பற்றிய கேள்விக்கு, EPS ஆசைப்படலாம், ஆனால் பேராசைப்படக் கூடாது என்று பதிலளித்துள்ளார்.

News October 9, 2025

BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

தங்கம் விலையில் ஒரு நாளைக்கு 2 முறை மாற்றம் ஏற்படுவது தற்போது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் காலையில் ஆபரணத் தங்கம் 1 சவரன் ₹120 அதிகரித்த நிலையில், மதியம் மேலும் ₹200 உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இன்று ₹320 அதிகரித்ததை அடுத்து, விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹11,425-க்கும், 1 சவரன் ₹91,400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News October 9, 2025

IND vs SA: இந்திய அணி பேட்டிங்

image

மகளிர் உலகக் கோப்பையில் இன்று இந்தியா, தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. முதலில் டாஸ் வென்ற தெ.ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பாக்., இலங்கை அணிகளை வீழ்த்தியுள்ள இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. அதேநேரம், இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்த தெ.ஆப்பிரிக்கா, நியூசிலாந்தை வென்றது. இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

error: Content is protected !!