News October 9, 2025
இந்தியர்கள் வாழும் பகுதியை ‘SLUM’ என்ற பிரிட்டன் MP

பிரிட்டனில் இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் அதிகம் வசிக்கும் ஹேண்ட்ஸ்வொர்த் பகுதியை, SLUM (சேரி) என அந்நாட்டு MP ராபர்ட் ஜென்ரிக் விமர்சித்தது சர்ச்சையாகியுள்ளது. ஒரு வெள்ளையரை கூட அங்கு காணவில்லை எனவும், தான் வாழ விரும்பும் நாடு இது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், இது கலாச்சார பன்முகத்தன்மை மிக்க பகுதி எனவும், MP இனவெறியுடன் பேசுவதாகவும் பலரும் கண்டித்து வருகின்றனர்.
Similar News
News October 9, 2025
எந்த பாட்டில் முதலில் நிரம்பும்?

அடுத்தடுத்து நியூஸ் படிச்சி கொஞ்சம் டயர்டா ஃபீல் பண்ணுறீங்களா..? வாங்க ஒரு சின்ன கேம் ஆடுவோம். மேலே உள்ள படத்தில், ஒரு குழாயில் இணைக்கப்பட்ட 7 பாட்டில்களை காணலாம். அதை கவனமாகப் பார்த்து, முதலில் எந்த பாட்டில் நிரம்பும் என சொல்லுங்கள். கொஞ்சம் லாஜிக்குடன் யோசித்தால், உங்களுக்கு பதில் கிடைக்கும். உங்க ஃப்ரண்ட்ஸ்க்கும் ஷேர் பண்ணி கேட்டுப்பாருங்க!
News October 9, 2025
கந்த சஷ்டி, விடுமுறை.. நாளை முதல் சிறப்பு அறிவிப்பு

கந்த சஷ்டி, வார விடுமுறையையொட்டி ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை முதல் அக்.12 வரை 3 நாள்களுக்கு சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும், அக்.27-ம் தேதி கந்தசஷ்டி விழாவையொட்டி பிற பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு 400 சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
News October 9, 2025
அமைச்சரின் பேச்சால் திமுக கூட்டணியில் சலசலப்பு!

பணக்காரர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே காங்கிரஸார் வருவார்கள்; ஆனால் திமுகவினர் அப்படி அல்ல என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது. வேடசந்தூரில் திருமண விழா ஒன்றில், MP ஜோதிமணி முன்னிலையில் இந்த கருத்தை கூறியுள்ளார். ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சியினருக்கு கூட்டணியில் உரிய மரியாதை இல்லை என பேச்சு எழுந்துள்ள நிலையில், அமைச்சரின் இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையாக வெடித்துள்ளது.