News October 9, 2025
தாக்கப்பட்ட பாஜக MP கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

மேற்குவங்கத்தில் <<17928599>>பாஜக MP ககென் முர்மு<<>> தாக்கப்பட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த இவருக்கு ஹாஸ்பிடலில் சிகிச்சை வழங்கப்பட்டது. இதற்கு காரணம் திரிணாமுல் காங்., என அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதனை மம்தா மறுத்த நிலையில், வாக்குமூலம் கொடுத்துள்ளார் MP ககென். தன்னை தாக்கியவர்கள், TMC கட்சியை சேர்ந்தவர்கள் எனவும், மம்தாவின் ஆதரவாளர்கள் எனவும் சொல்லிக்கொண்டே தாக்கியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Similar News
News October 9, 2025
கரூர் மக்களை விஜய் எப்போது சந்திக்கிறார்? புது தகவல்

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க அனுமதி கோரியிருந்தார் விஜய். இந்நிலையில், இம்முறை அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, அக்.13-ல் தனியார் மண்டபத்தில் இந்த சந்திப்பை நடத்த போலீசிடம் அனுமதி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பங்கேற்க உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், தவெகவின் முக்கிய நிர்வாகிகளுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
News October 9, 2025
₹5 லட்சம் வரை வட்டியில்லாமல் கடன் வழங்கும் அரசு

பெண்களே, தொழில் தொடங்கும் ஆசை இருக்கிறதா? உங்களுக்காகவே ₹5 லட்சம் வரை வட்டியில்லாமல் கடன் வழங்குகிறது மத்திய அரசின் Lakhpati didi திட்டம். சுய உதவிக் குழுவில் இருப்பவர்கள், ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்கும் குறைவாக இருப்பவர்கள் இந்த திட்டத்தில் கடன் பெறலாம். இதற்கு, அருகில் இருக்கும் SHG அலுவலகத்தையோ அல்லது பஞ்சாயத்து ஆபீசையோ அணுகுங்கள். அனைத்து பெண்களுக்கும் இத SHARE பண்ணுங்க.
News October 9, 2025
உதயநிதியின் HIT LIST-ல் இருக்கிறாரா இந்த அமைச்சர்?

சீனியர் மா.செ., அமைச்சர்களை நீக்கி அந்த இடத்தில் இளைஞர் அணியினரை அமர்த்த உதயநிதி நினைப்பதாக கூறப்படுகிறது. இதற்காக, சரியாக பணி செய்யாத தலைகளை அவர் கண்டறிந்து வருகிறாராம். இந்நிலையில், திண்டுக்கலில் சில பணிகளில் தொய்வு இருப்பதை கண்டறிந்துள்ளதாக உதயநிதி கூறியுள்ளார். எனவே, திண்டுக்கல் மா.செ.,வாக இருக்கும் அமைச்சர் சக்கரபாணிக்கு அடுத்த முறை சீட் வழங்குவதில் சிக்கல் ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ளது.