News April 15, 2024
கோடைகால சிறப்பு வசதி அறிவிப்பு

கோடைக்கால சிறப்பு ரயிலான சென்னை எழும்பூர் – திருநெல்வேலி ரயிலில் 2 குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலில் இரண்டு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு பதிலாக இரண்டு மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் சேர்க்கப்படும் எனவும், இந்த பெட்டிகள் மே 23ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 15, 2026
மதுரை: GAS Bill-ஐ விட அதிக பணமா..?

மதுரை மக்களே; உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News February 15, 2026
மதுரை: சாலை விபத்தில் இளைஞர் தலை நசுங்கி பலி.!

தும்பைபட்டியைச சேர்ந்தவர் கருப்பையா (30). நேற்று இவர் தனது டூவீலரில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து திருப்பத்தூர் பாலத்தின் அருகே விபத்தில் சிக்கினார். இதில் முகம் சிதைந்து, தலை நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார். இவர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 15, 2026
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (14.02.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


