News October 9, 2025
நாமக்கல்: நாளை மின்தடை அறிவிப்பு – ரெடியா இருங்க!

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மெட்டாலா, வாழவந்தி, கெட்டிமேடு, வெப்படை, ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (அக்.10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோனங்கிப்பட்டி, பொன்னேரி, ,அ.பாலப்பட்டி, ஈச்சவாரி, பொம்மசமுத்திரம், தூசூர், வெப்படை, வெள்ளிக்குட்டை, சின்னார்பாளையம், மெட்டாலா, ஆயில்பட்டி, கணவாய்பட்டி, கப்பலூத்து, பாதரை, இந்திரா நகர், ரங்கனூர், புதுப்பாளையம், ஆகிய பகுதிகளில் இருக்காது.
Similar News
News October 28, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

நாமக்கல் மாவட்டம் நாமக்கலில் இருந்து நாளை (புதன்) 29/10/2025 மற்றும் வரும் நாட்களில் காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல 20671 பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன! நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்! இந்த செய்தியினை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
News October 28, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி இன்று 28.10.2025 வெளியிட்ட செய்திக் குறிப்பில், “வரும் 30.10.2025 அன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் எரிவாயு உருளை பதிவு, விநியோகம் மற்றும் புகார் தொடர்பான கூட்டம் மாலை 3.30 மணியளவில் நடைபெற உள்ளது” என அறிக்கை வாயிலாக கூறியுள்ளார்.
News October 28, 2025
அறிவித்தார் நாமக்கல் ஆட்சியர்!

நாமக்கல் மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருகிற (அக்.31) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மேலும், இக்கூட்டத்தின் வாயிலாக வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள் மற்றும் தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


