News April 15, 2024
100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பார்வையற்றோர், காதுகேளாதோர் நல சங்கம் சார்பாக, அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு இன்று நடைபெற்றது. இதையடுத்து பிரெய்லி முறையில் பேலட் தாள்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம், வரிசை எண் அச்சடிக்கப்பட்ட விவரங்களை வாசித்து காட்டும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சரயு இன்று துவக்கி வைத்தார்.
Similar News
News January 12, 2026
கிருஷ்ணகிரியில் மின்தடை; உங்க ஏரியா இருக்கா?

நரிகானாபுரம், பாகலூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.13) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, கொத்தப்பள்ளி, மற்றும் அத்திமுகம், செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், எழுவப்பள்ளி ஆகிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும்.
News January 12, 2026
கிருஷ்ணகிரியில் 4 பேர் அதிரடி கைது!

காமன்தொட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பிரவீன்குமார் (38). கடந்த 7-ம் தேதி காமன்தொட்டி நெடுஞ்சாலையில் 5 பேர் தங்களை போலீசார் என கூறி, பிராவின் குமாரை காரில் கடத்தியுள்ளனர். மேலும் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டினர். சுதாரித்து கொண்ட பிரவீன் பணம் காரில் உள்ளது எடுத்து வருகிறேன் என கூறி தப்பினார். இதையடுத்து போலீசார் மல்லேஷ், நெல்சன் (42), வரதராஜன் (30), ராஜசேகர் (50) ஆகியோரை கைது செய்தனர்.
News January 12, 2026
கிருஷ்ணகிரி: வாலிபருக்கு குண்டார்!

நாகரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுமன் (22). இவர் கடந்த மாதம் மூதாட்டி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதையடுத்து சிப்காட் போலீசார் சுமனை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் சுமன் மீது மேலும் சில வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் தற்போது சுமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.


