News October 9, 2025

Cinema Roundup : ₹60 கோடி மோசடி செய்த நடிகை

image

*பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ டிரெய்லர் இன்று காலை 11.07 மணிக்கு வெளியாகிறது. *கவின் நயன்தாரா நடிக்கும் படத்திற்கு ‘Hi’ என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. * நடிகை ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல நினைத்தால் மோசடி செய்த ₹60 கோடியை கொடுக்க வேண்டும் என மும்பை HC தெரிவித்துள்ளது. *ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் டைட்டில் ‘வாரணாசி’ என தகவல் கசிந்துள்ளது.

Similar News

News October 9, 2025

BREAKING: திமுகவுடன் கூட்டணி.. முடிவை அறிவித்தார்

image

‘கை’ நம்மை விட்டு எங்கும் போகாது என கூறியுள்ள உதயநிதி ஸ்டாலின், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருப்பதற்கான முடிவை அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக கூடுதல் சீட்டு, ஆட்சியில் பங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எழுப்பி வருகின்றனர். அவர்களை திமுக சமாதானம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. ராகுல் – விஜய் தொலைபேசியில் பேசிய விவகாரத்தால் கூட்டணி மாறவும் வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது.

News October 9, 2025

இந்தியாவில் EV காரை அறிமுகம் செய்யும் Skoda

image

Skoda நிறுவனம், இந்தியாவில் 2027-28 ஆண்டில் அதன் EV கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. அதற்குள் இந்தியாவில் EV கார்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு மேம்படும் என எதிர்பார்ப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், உள்ளூர்மயமாக்கப்பட்ட சப்ளையர் தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. Skoda நிறுவனம் வெளிநாடுகளில் பிரீமியம் ரக EV கார்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News October 9, 2025

இந்த உணவுகளை சுடவைச்சி சாப்பிடாதீங்க!

image

இரவில் சமைத்த உணவு மீந்து போனால், அதனை காலையில் சுடவைத்து சாப்பிடும் பழக்கம் பலரின் வீடுகளிலும் உள்ளது. இருப்பினும், அப்படி சில உணவுகளை சுடவைத்து சாப்பிடக்கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். சுடவைப்பதால் சில உணவுகளால் செரிமான கோளாறுகள் ஏற்படுவதுடன், அவை வயிற்று உபாதைகளையும் உண்டாக்கும். அது என்னென்ன என தெரிந்து கொள்ள மேலே உள்ள படங்களை வலது பக்கம் Swipe பண்ணி பாருங்க. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!