News October 9, 2025
திமுக கூட்டணி.. உதயநிதியின் புதிய முடிவு

யாருடன் கூட்டணி வைத்தாலும் திமுக இருக்கும் வரை பாஜகவால் தமிழ்நாட்டை தொட முடியாது என உதயநிதி சவால் விடுத்துள்ளார். கரூர் சம்பவத்திற்கு பிறகு அதிமுக, தவெக, பாஜக நெருங்கி வருவதாக பேசப்படுகிறது. நாமக்கல்லில் பேசிய EPS, திமுகவுடையது வெற்று கூட்டணி எனவும், அதிமுகவின் கூட்டணி பலமான வெற்றி கூட்டணி எனவும் பேசியிருந்தார். குறிப்பாக விஜய் கட்சி கொடியை சுட்டிக் காட்டி பேசியது அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.
Similar News
News October 9, 2025
‘Startup’ நிறுவனங்களின் வருகை அதிகரிப்பு: CM ஸ்டாலின்

கோவை கொடிசியாவில் உலக புத்தொழில் மாநாட்டை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதால்தான் தமிழகத்தை நோக்கி தொழில் நிறுவனங்கள் வருவதாகவும், கடந்த 4 ஆண்டுகளில் 6 மடங்கு புத்தொழில் நிறுவனங்கள் புதிதாக பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். 2030-க்குள் TN-ஐ ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News October 9, 2025
சும்மா சும்மா மொபைல பாக்குறீங்களா?

மனிதன் போனுக்கு அடிமையாகிவிட்டான் என்றே கூறலாம். வேலையே இல்லை என்றாலும், சும்மா சும்மா போனை எடுத்து பார்ப்பவர்கள் இங்கு அதிகம். இது பல உடல்நல பிரச்னைகளுக்கு ஆளாக்குகிறது. கண் எரிச்சல், தலைவலி, பார்வை குறைவு, கழுத்து – தோள்பட்டை வலி போன்றவற்றை உண்டாக்குகிறது. தூக்கத்தை தரும் மெலட்டோனின் ஹார்மோன் சுரப்பை குறைப்பதுடன், நினைவாற்றலையும் மங்கச் செய்கிறதாம். பாத்து இருந்துக்கோங்க மக்களே!
News October 9, 2025
லோன் வாங்கியவர்களுக்கு HAPPY NEWS

HDFC வங்கி தனது MCLR வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. குறிப்பிட்ட ஆண்டுகள் வரையான கடன்களுக்கு வட்டி விகிதம் 15 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதால் MCLR இனி 8.40% முதல் 8.65%-மாக இருக்கும். இதனால் பர்சனல், பிசினஸ் மற்றும் ஹோம் லோன் வாங்கியோருக்கு வட்டி / EMI சிறிது குறையும். முன்னதாக SBI வங்கியும் தனது MCLR வட்டி விகிதத்தை 0.5 முதல் 1.5% வரை குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. SHARE