News October 9, 2025
கடன் தொல்லையை விரட்டும் விநாயகரின் மூல மந்திரம்

காலை பிரம்ம முகூர்த்த வேளையில் விநாயகரின் மந்திரத்தை சொல்வதன் மூலம், பல நன்மைகள் கிட்டும். வாழ்வில் கடன் தொல்லைகள் நீங்க, இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.
‘ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய,
ஹஸ்தி முகாய, லம்போதராய,
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம்
ஹ்ரீம் கம் கேகே ஸ்வாஹா’.
இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.
Similar News
News October 9, 2025
லோன் வாங்கியவர்களுக்கு HAPPY NEWS

HDFC வங்கி தனது MCLR வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. குறிப்பிட்ட ஆண்டுகள் வரையான கடன்களுக்கு வட்டி விகிதம் 15 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதால் MCLR இனி 8.40% முதல் 8.65%-மாக இருக்கும். இதனால் பர்சனல், பிசினஸ் மற்றும் ஹோம் லோன் வாங்கியோருக்கு வட்டி / EMI சிறிது குறையும். முன்னதாக SBI வங்கியும் தனது MCLR வட்டி விகிதத்தை 0.5 முதல் 1.5% வரை குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. SHARE
News October 9, 2025
நயினார் பரப்புரை பயணத்தின் தொடக்க விழாவில் மாற்றம்

மதுரையில் வரும் 12-ம் தேதி, நயினார் நாகேந்திரனின் பிரச்சார பயணத்தை ஜெ.பி.நட்டா தொடங்கி வைப்பதாக இருந்தது. இந்நிலையில் நட்டாவின் தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில், நிர்மலா சீதாராமன் இந்த பயணத்தை தொடங்கி வைக்க உள்ளார். நயினார் நாகேந்திரனின் மதுரை பரப்புரைக்கு <<17944148>>15-க்கும் அதிகமான நிபந்தனைகளை<<>> போலீஸ் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 9, 2025
Bigg Boss-க்கு வார்னிங் கொடுத்த DCM

மாசு கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாததால் கன்னட பிக்பாஸ் செட்டை மூட கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், இந்த தவறை திருத்திக்கொள்ள வாய்ப்பு வழங்குவதாக கூறிய கர்நாடக DCM டி.கே.சிவகுமார், இனி இப்படி நடக்கக்கூடாது என வார்னிங்கும் கொடுத்தார். மேலும், இடத்துக்கு சீல் வைத்தால் வேலைவாய்ப்பு பறிபோகும் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.