News October 9, 2025
இஸ்ரேலும், ஹமாஸும் அமைதி திட்டத்திற்கு ஒப்புதல்: டிரம்ப்

அமைதி திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும், ஹமாஸும் கையெழுத்திட்டு இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் காரணமாக பணயக்கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும், இஸ்ரேலின் படைகள் பின்வாங்கும் எனவும் SM-ல் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதில் அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள் என்றும், இந்நாள் இஸ்லாமிய நாடுகளுக்கு மிகவும் சிறப்பான நாள் என அவர் கூறியுள்ளார்.
Similar News
News October 9, 2025
சும்மா சும்மா மொபைல பாக்குறீங்களா?

மனிதன் போனுக்கு அடிமையாகிவிட்டான் என்றே கூறலாம். வேலையே இல்லை என்றாலும், சும்மா சும்மா போனை எடுத்து பார்ப்பவர்கள் இங்கு அதிகம். இது பல உடல்நல பிரச்னைகளுக்கு ஆளாக்குகிறது. கண் எரிச்சல், தலைவலி, பார்வை குறைவு, கழுத்து – தோள்பட்டை வலி போன்றவற்றை உண்டாக்குகிறது. தூக்கத்தை தரும் மெலட்டோனின் ஹார்மோன் சுரப்பை குறைப்பதுடன், நினைவாற்றலையும் மங்கச் செய்கிறதாம். பாத்து இருந்துக்கோங்க மக்களே!
News October 9, 2025
லோன் வாங்கியவர்களுக்கு HAPPY NEWS

HDFC வங்கி தனது MCLR வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. குறிப்பிட்ட ஆண்டுகள் வரையான கடன்களுக்கு வட்டி விகிதம் 15 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதால் MCLR இனி 8.40% முதல் 8.65%-மாக இருக்கும். இதனால் பர்சனல், பிசினஸ் மற்றும் ஹோம் லோன் வாங்கியோருக்கு வட்டி / EMI சிறிது குறையும். முன்னதாக SBI வங்கியும் தனது MCLR வட்டி விகிதத்தை 0.5 முதல் 1.5% வரை குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. SHARE
News October 9, 2025
நயினார் பரப்புரை பயணத்தின் தொடக்க விழாவில் மாற்றம்

மதுரையில் வரும் 12-ம் தேதி, நயினார் நாகேந்திரனின் பிரச்சார பயணத்தை ஜெ.பி.நட்டா தொடங்கி வைப்பதாக இருந்தது. இந்நிலையில் நட்டாவின் தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில், நிர்மலா சீதாராமன் இந்த பயணத்தை தொடங்கி வைக்க உள்ளார். நயினார் நாகேந்திரனின் மதுரை பரப்புரைக்கு <<17944148>>15-க்கும் அதிகமான நிபந்தனைகளை<<>> போலீஸ் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.