News October 9, 2025
வார விடுமுறை.. அரசு முக்கிய தகவல்

வார விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் 855 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சொந்த ஊர் செல்லும் மக்களின் நலன் கருதி கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 10-ம் தேதி 315 பேருந்துகளும், 11-ம் தேதி 310 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. கோயம்பேட்டில் இருந்து நாகை, ஓசூர், உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகளுடன் மொத்தம் 230 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
Similar News
News October 9, 2025
கயாது காட்டில் பட மழை

சுந்தர் C இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில், கயாது லோஹர் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் 2 ஹீரோயின்கள் எனவும், இன்னொரு ஹீரோயினுக்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, அதர்வாவுடன் ‘இதயம் முரளி’ நடித்து முடித்த கயாது, சிம்பு, ஜி.வி.பிரகாஷ் படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுபோக தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
News October 9, 2025
சற்றுமுன்: நாகேந்திரன் மரணம்.. பெரும் பரபரப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தாதா நாகேந்திரன், ஸ்டான்லி ஹாஸ்பிடலில் உயிரிழந்தார். 2005-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து பல்வேறு ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து செய்து வந்த நாகேந்திரனை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர். சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News October 9, 2025
சரிவுடன் தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தைகள்!

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றும் சரிவுடன் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களை கலக்கமடைய செய்துள்ளது. சென்செக்ஸ் 82 புள்ளிகள் சரிந்து 81,691 புள்ளிகளிலும், நிஃப்டி 5 புள்ளிகள் சரிந்து 25,040 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Tata Motors, NTPC, HDFC Life, Maruti Suzuki உள்ளிட்ட நிறுவனங்களின் ஷேர்கள் சரிந்துள்ளன. அதேநேரம் TCS, Tata Steel, Reliance நிறுவனங்களின் பங்குகள் லாபம் கண்டுள்ளன.